ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம். வேலைப்பளுவினால் நேரமின்மை, சோம்பலினால் விருப்பமின்மை, நம் எழுத்தை அவ்வளவாக யாரும் வாசிப்பதில்லை என்பதனாலும் தம் எழுத்து குறித்த ஒரு திருப்தியற்ற தன்மையாலும் வருகிறது ஆர்வமின்மை... பைசாக்கு புரியோஜனமில்லை, எழுதி எழுதி என்ன கண்டோம், எதற்கு நேரத்தை விரயம் பண்ண வேண்டும் என்று தோன்றும் திடீர் ஞானோதயம் என்று பல பல காரணங்கள் உள்ளன. இதை தாண்டி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி, அதனால் எழுதும் ஆசையை விடுதல் என்றொரு காரணமும் உள்ளது.நிச்சயம் எழுதுவதில் நமக்கு தனிப்பட்ட சந்தோஷம் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் பதிவுலகில், நம்மை நாமே நிர்ப்பந்தப்படுத்தி கொண்டு எழுதுகிறோமோ. அன்றாடம் பதிவு போட்டாக வேண்டும் அல்லது இத்தனை பின்னூட்டமிட வேண்டும் என்றெல்லாம் நம்மை நிர்ப்பந்தித்து கொள்வதால், நம் அன்றாட வேலைகளும், குடும்ப உறவுகளும் பாதிக்கப்படுகிறதோ. அதனால் கூட திடீரென்று பதிவுலகை வெறுக்க நேரலாம். நம் ஆசைக்கு நாமே பலியாகிவிட்டு அதனை வெறுப்பதேன்.
எழுதாத வரை வேண்டுமானால்இணையத்தளங்கள் பொழுது போக்காக இருக்கலாம். பதிவை வெளியிட துவங்கிவிட்டால், அது பொழுது போக்கை தாண்டி ஒரு வேலையாகிறது. நம்மை கஷ்டப்படுத்தி கொண்டு பதிவு போட வேண்டும் என்கிற அவசியமில்லை. எத்தனையோ பேர் எழுதுகிறார்கள். சிலரின் படைப்பு நம்மை வெகுவாக கவர்கிறது. அவர் தன் படைப்பின் மூலம் நம் மனதை கொள்ளை அடிக்கிறார். தன் படைப்பினால், அறிமுகமற்றவராக இருப்பினும் நமக்கு நெருங்கிய தோழனாகிறார். திடீரென்று அவர் எழுதுவதை நிறுத்தினால், ரெண்டே ரெண்டு நாளைக்கு அவரை தேடுவோம். பிறகு மறந்து விடுவோம். இவ்வளவு தான் வலைப்பூவின் மார்க்கெட் நிலவரம் என்று சொல்லலாமா...
ஆனால் பதிவர்கள் என்கிற எல்லையை தாண்டி, குடும்ப நண்பர்களாக பதிவர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வது என்று உறவு வளர்கிறது. எத்தனையோ நல்ல உள்ளங்களை பதிவுலகம் சம்பாதித்து கொடுக்கிறது. எழுதாமல் போனாலும் அந்த உறவு நீடிக்கலாம். அங்கீகாரம், திறமைபடைத்த எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. அதற்காக நாம் சொல்ல நினைத்ததை சொல்லாமல் இருப்பது சரியா. சில தினங்களுக்கு முன் தொலைக்காட்சியில் ஒரு பேட்டி பார்த்தேன். ஒரு நாடக இயக்குனர், "ஐநூறு பேர் அமரக்கூடிய அரங்கில் பத்து இருபது பேர் நாடகம் பார்க்க வந்தால் கூட ஆர்வம் குன்றாமல் நாடகம் போடுவோம்" என்றார். ஒரு படைப்பாளிக்கு அது தான் வேண்டும். வாசிப்பாளர்களின் எண்ணிக்கையை மனதில் கொள்ளாமல் படைப்பை மாத்திரமே மனதில் கொண்டு எழுதுவதால் நமக்கும் அதீத சந்தோஷமே.
பலரின் பதிவுகளை வாசிக்கும் போது, எவ்வளவு அற்புதமாக எழுதுகிறார்கள். நாமெல்லாம் என்ன எழுதுகிறோம் என்று தோன்றும். அம்மாதிரியான எழுத்துகளை வாசிப்பது, நமக்கான பயிற்சியாகவும் எடுத்து கொள்ளலாம். தங்கள் வலைத்தளத்தில் எழுதிய பதிவுகளையே, இன்று பலர் புத்தகமாக வெளி கொண்டு வருகிறார்கள். வலைப்பதிவில் எழுதும்போது, எத்தனை பேர் இது புத்தகமாக வெளி வரும் என்று நினைத்திருப்பார்கள். வலைப்பூ தந்த ஒரு வாய்ப்பு தான் இது. எழுத்தாளர்களுக்கு மிக பெரிய வரப்பிரசாதம் தானே பதிவுலகம்.
என்ன எழுதுவதென்று யோசித்து எழுத ஒன்றுமே தோன்றாததால் எழுதுவதை நிறுத்தவும் வாய்ப்புள்ளது. பதிவெழுதாமல் வெறும் பின்னூட்டம் மட்டும் இடுபவர்கள் மிக குறைவு. பதிவெழுதுவதை நிறுத்தும் கொஞ்ச நாளில் பின்னூட்டமிடுவதையும் நிறுத்தி கொள்கிறார்கள். நாம் எழுதினாலும், எழுதாவிட்டாலும் - சிறந்த படைப்பை வாசிக்க நேர்ந்தால் கருத்துரை சொல்ல தோன்ற வேண்டும். அது பதிவுலகிற்கு நன்மை பயக்கும்.
வாழ்க்கை எல்லோருக்கும் அனுபவங்களை கொடுப்பதில்லை. அடிபட்டவர்கள், காலம் கற்று கொடுத்த பாடத்தை அனுபவித்தவர்கள் தான் எழுத வேண்டுமென்றால் ஒரு சதவிதம் பேர் கூட எழுத முடியாது. நமக்கென்ன எழுத வருகிறதோ அதை எழுதலாம். நான் அப்படி தான் எழுதுகிறேன். நகைசுவையாக எழுத வராது என்பதல்ல. இப்படியே எழுதி பழகிவிட்டது. கவிதைகள் நிறைய எழுதி வைத்துள்ளேன். ஏனோ பதிவிட மனமில்லை. இப்படியாக தொடர்கிறது அவரவர் எழுத்து பயணம்.
தற்சமயம் வலைப்பதிவில் எழுதுபவர்கள் இவரை மறந்து இருக்கக்கூடும் அல்லது தெரியாமல் இருக்கக்கூடும். அவர் அனுராதா... (http://anuratha.blogspot.com/) கேன்சருடன் நடந்த யுத்தத்தில் இறந்து, தனது வலை தள பயணத்தையும் முடித்து கொண்டார். கான்சர் வந்தது முதல் தன் உடல் மற்றும் மன மாற்ற சிந்தனைகளை பதிவாக வெளியிட்டார்கள். திடீரென்று அவர் ஞாபகம் எதனாலோ வந்தது. அதனால் அவரை பற்றி எழுதி விட்டேன். அவரது வலைத்தளம் உயிர்ப்புடன் உள்ளது.
என்றேனும் நானும் கூட பதிவுலகில் இருந்து செல்லலாம். பலவிதமான குடும்ப செலவுக்கு மத்தியில், மாதந்தோறும் இணையதள இணைப்புக்காக செலவழிக்கும் தொகை அதிகமோ என்று தோன்றும் பட்சத்தில்.


54 கருத்துரைகள்:
அருமையான ஆய்வு.
பல கருத்துக்கள் என்னுடையதுடன் ஒத்துப் போவதாகவும் உள்ளன்.
நல்ல பகிர்வு.
மனதில் உள்ளதை அற்புதமாக கூறியுள்ளீர்கள். நீங்கள் கூறியதில் தான் எத்தனை உண்மைகள்.
//வாசிப்பாளர்களின் எண்ணிக்கையை மனதில் கொள்ளாமல் படைப்பை மாத்திரமே மனதில் கொண்டு எழுதுவதால் நமக்கும் அதீத சந்தோஷமே.// அருமை.
நன்று எனக்கும் இது போன்று தோன்றுவது அடிக்கடி நடப்பதுதான். வெளியேறினாலும் சிறிது நாட்களுக்குள் மீண்டும் எழுத வேண்டும் என்று தோன்றத்தான் போகிறது. அவ்வப்போது ஏற்படும் தேக்கத்தைக் கடக்க வேண்டியது நமது கையில்தான் உள்ளது.
Right
உங்கள் கருத்துகள் அனைத்தும் உண்மை.
correct!
ம்ம்.. இப்ப அடிக்கடி அப்படித் தோணுது. நேர விரயம்தான் காரணம். குடும்பத்திற்கான நேரத்தை இதில் செலவழிக்கிறோமோ என்ற ஒரு எண்ணமும்கூட. ஆனாலும், ஆர்வம் தலைதூக்குவதால் எழுதுவதை விட மனமில்லை. ஆனால், அவசியப்பட்டால் விட்டுவிடும் மனக்கட்டுப்பாடும் அவசியமே, நீங்கள் சொன்னதுபோல்.
ஆமாங்க சில நேரம் அப்படி தான் தோன்றும் எழுதாமல் விடலாமான்னு..எப்படிங்க இப்படி எல்லாமே யோசிக்க வைக்கும் பதிவா தரீங்க....
வாழ்க்கை அனுபவத்தில் வலைப்பூவும் ஒரு அனுபவத்தை அளிக்கிறது! யதார்த்தமான எழுத்துக்கள்!
ராமலக்ஷ்மி said...
அருமையான ஆய்வு.
பல கருத்துக்கள் என்னுடையதுடன் ஒத்துப் போவதாகவும் உள்ளன்.'///
அதுவே பதிவின் நோக்கம். மகிழ்ச்சி... கருத்துரைக்கு ராமலட்சுமி மேடம்.
புவனேஸ்வரி ராமநாதன் said...
மனதில் உள்ளதை அற்புதமாக கூறியுள்ளீர்கள். நீங்கள் கூறியதில் தான் எத்தனை உண்மைகள்.'////
நன்றி புவனேஸ்வரி மேடம்.
தமிழ் வினை said...
அவ்வப்போது ஏற்படும் தேக்கத்தைக் கடக்க வேண்டியது நமது கையில்தான் உள்ளது.;////
நன்றி புவனேஸ்வரி மேடம்.
உண்மையாக சொல்லி இருக்கிறிர்கள் தமிழ்வினை.
சசிகுமார் said...
Right'////
நன்றி சசிகுமார்.
சரவண வடிவேல்.வே said...
உங்கள் கருத்துகள் அனைத்தும் உண்மை.'///
தங்களின் முதல் வருகைக்கு மகிழ்ச்சிசரவண வடிவேல்.
Geetha6 said...
correct!'////
நன்றி கீதா6.
ஹுஸைனம்மா said...
ஆனால், அவசியப்பட்டால் விட்டுவிடும் மனக்கட்டுப்பாடும் அவசியமே, நீங்கள் சொன்னதுபோல்.'//
உண்மை தான் ஹுஸைனம்மா
தமிழரசி said...
.எப்படிங்க இப்படி எல்லாமே யோசிக்க வைக்கும் பதிவா தரீங்க..//
கருத்துரைக்கு மகிழச்சி தமிழரசி.
எஸ்.கே said...
வாழ்க்கை அனுபவத்தில் வலைப்பூவும் ஒரு அனுபவத்தை அளிக்கிறது! யதார்த்தமான எழுத்துக்கள்!'///
கருத்துரைக்கு நன்றி எஸ்.கே
மிகவும் அருமையான எண்ணங்கள். எழுதுவதையே ஒரு தொழிலாக வைத்து இருந்திருக்கலாமோ என சிந்திக்கும் அளவுக்கு எழுத்து மீது ஒரு பற்று இருப்பது உண்டு. நன்றி ஐயா.
தங்களுடைய கவிதைகளையும் காணும் ஆவல் எழுகிறது.
கொடுத்துள்ள இணைப்பு வேலை செய்யவில்லையே?
தெளிவான பார்வை.
வணக்கம் ரமேஷ் பொதுவா வலைப்பூ நம்மோட எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்க்குத்தான்..அதை படிப்பார்கள் படிக்கமாட்டார்கள் என்றெல்லாம் எண்ணவேண்டியதே இல்லை எழுதிட்டே இருங்க....
உங்களுடைய பார்வை மிகச்சரி...
V.Radhakrishnan said...
மிகவும் அருமையான எண்ணங்கள். எழுதுவதையே ஒரு தொழிலாக வைத்து இருந்திருக்கலாமோ என சிந்திக்கும் அளவுக்கு எழுத்து மீது ஒரு பற்று இருப்பது உண்டு. ''///
ஆனால் எழுத்தை தொழிலாக கொண்ட பின், நம் எண்ணம் வேறு விதமாக அமையலாஆனால் எழுத்தை தொழிலாக கொண்ட பின், நம் எண்ணம் வேறு விதமாக அமையலாமே சார்
ஜோதிஜி said...
கொடுத்துள்ள இணைப்பு வேலை செய்யவில்லையே?
தெளிவான பார்வை.///
மன்னிக்கவேண்டும். காலையில் அந்த தளத்திற்கு சென்று, அந்த தளம் இருப்பதை உறுதி கொண்ட பின் தான் லிங்க கொடுத்தேன். இப்போது பாருங்கள்.
http://www.anuratha.blogspot.com/
ப்ரியமுடன் வசந்த் said...
வணக்கம் ரமேஷ்
உங்களுடைய பார்வை மிகச்சரி...////
நன்றி வசந்த வருகைக்கு.
நாமளும் ப்ளாக் ஆரம்பித்துவிடலாம் தொடர்ச்சியாக எழுதியும் விடலாம் என்று நினைத்து ஆரம்பித்து எதை எழுதுவது என்று தவித்த நாட்கள் உண்டு.
உங்கள் கருத்துகள் அனைத்தும் உண்மை.
தோணும்போது எழுதனும்.. அதுக்காக அப்படியே இதை தூக்கிப்போட்டுட்டு போறவங்க செய்யறது தப்புன்னு தோணும்..இது ஒரு உலகம் இதுல அப்படியே ஐடி , ப்ளாக் எல்லாத்தையும் அழிச்சிட்டு காணாப்போனா அவர்களின் நண்பர்களைத் துயரப்படுத்திட்டுப் போறதா தான் அர்த்தம்.. :(
தோணும்போது எழுதனும்.. அதுக்காக அப்படியே இதை தூக்கிப்போட்டுட்டு போறவங்க செய்யறது தப்புன்னு தோணும்..இது ஒரு உலகம் இதுல அப்படியே ஐடி , ப்ளாக் எல்லாத்தையும் அழிச்சிட்டு காணாப்போனா அவர்களின் நண்பர்களைத் துயரப்படுத்திட்டுப் போறதா தான் அர்த்தம்.. :(
பதிவு என்பது நமக்கு தொழில் இல்லை அதனால நேரம் கிடைக்கும் போது ஒரு விசிட் பொழுதுபோக்காக
இப்படி எடுத்துக்கொண்டால் கஸ்டம் இல்லை.
நல்ல பதிவு! எழுதணுங்கிறது சுய ஆர்வத்தின் பேரில் உந்துதலில் நிகழ்ந்தால் இது போன்று ‘கம்பல்சிவ்’வாக செய்தே ஆகவேண்டுமென்றே தோணச் செய்யாதுன்னு நினைக்கிறேன். ஏன்னா, அது இயல்பா எப்போ வெளிய வைக்கணும் இந்தக் கருத்தை, எண்ணத்தை அப்படின்னு தோணுதோ அப்போ வைச்சிட்டு நாம பாட்டுக்கு அடுத்த வேலய பார்க்கப் போயிடுவோம்.
இடையில அப்படியே சொல்லாம கில்லாம விட்டுட்டுப் போறவங்களப் பொருத்து வருத்தப்படுறேன்... ப்ரீமெச்சூர்டான ஒரு முடிவோன்னு... இழப்பு என்னவோ அவங்களோட எழுதணும்னு வர்ற ஸ்பிரிட்டுக்குத்தான்..
அப்படியே இதையும் பாருங்க, சம்பந்தமான பதிவுதான்... http://kalvetu.blogspot.com/2010/10/blog-post_13.html
//
ஆனால் பதிவுலகில், நம்மை நாமே நிர்ப்பந்தப்படுத்தி கொண்டு எழுதுகிறோமோ. அன்றாடம் பதிவு போட்டாக வேண்டும் அல்லது இத்தனை பின்னூட்டமிட வேண்டும் என்றெல்லாம் நம்மை நிர்ப்பந்தித்து கொள்வதால், நம் அன்றாட வேலைகளும், குடும்ப உறவுகளும் பாதிக்கப்படுகிறதோ. அதனால் கூட திடீரென்று பதிவுலகை வெறுக்க நேரலாம்
//
மிகச்சரியான வார்த்தைகள்........
இதுவரை அனு அம்மாவின் வாழ்வைதான் வாசித்துக்கொண்டிறுந்தேன்
மனமும் கண்களும் கனத்துவிட்டது
இரும்பு மனுஷி.
தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....
சில நேரத்தில் நானும் இதிலிருந்து விலக வேண்டும் என்று யோசித்து பல நாட்கள் செயல் படுத்தியும் இருக்கிறேன். குடும்ப, தனிப்பட்ட நேரத்தை கொலை செய்யாத வரையில் இது நல்ல வடிகால் என்பதே என் கருத்து.
தவறு said...
உங்கள் கருத்துகள் அனைத்தும் உண்மை.'////
நன்றி தவறு வருகைக்கு.
முத்துலெட்சுமி/muthuletchumi said...
தோணும்போது எழுதனும்.. அதுக்காக அப்படியே இதை தூக்கிப்போட்டுட்டு போறவங்க செய்யறது தப்புன்னு தோணும்..இது ஒரு உலகம் இதுல அப்படியே ஐடி , ப்ளாக் எல்லாத்தையும் அழிச்சிட்டு காணாப்போனா அவர்களின் நண்பர்களைத் துயரப்படுத்திட்டுப் போறதா தான் அர்த்தம்.. '///
உண்மைதான். அவருக்கென்ன கஷ்டமோ முத்துலெட்சுமி
Thekkikattan|தெகா said...
நல்ல பதிவு! இழப்பு என்னவோ அவங்களோட எழுதணும்னு வர்ற ஸ்பிரிட்டுக்குத்தான்..
அப்படியே இதையும் பாருங்க, சம்பந்தமான பதிவுதான்... ///
அருமை சார். மிக அழகாக சொல்லி இருக்கீங்க.ஏற்கனவே வாசித்துள்ளேன். அந்த பதிவை.
வழிப்போக்கன் - யோகேஷ் said...
மிகச்சரியான வார்த்தைகள்... //
ஆமாம் யோகேஷ் சார்.
ராஜவம்சம் said...
இதுவரை அனு அம்மாவின் வாழ்வைதான் வாசித்துக்கொண்டிறுந்தேன்
மனமும் கண்களும் கனத்துவிட்டது
இரும்பு மனுஷி.. //
உண்மையிலேயே இரும்பு மனுஷி தான் ராஜவம்சம்.
முகுந்த் அம்மா said...
குடும்ப, தனிப்பட்ட நேரத்தை கொலை செய்யாத வரையில் இது நல்ல வடிகால் என்பதே என் கருத்து.''///
சிறந்த வடிகால் தான் முகுந்த அம்மா.
சிலருக்குப் பாட வரும்; சிலருக்கு ஆட வரும்; சிலருக்குப் படிக்க வரும்; சிலருக்கு எழுத...
வடிகால் என்ற கருத்து சரி. அந்தக் கண்ணோட்டத்தில் சுய/வெளி வற்புறுத்தல்கள் மறைந்துவிடுகின்றன என்று தோன்றுகிறது.
எதுவுமே பழகப் பழக அலுத்துப் போவதும் ஓய்ந்து போவதும் இயற்கை தானே? வழக்கங்களிலிருந்து உறவுகள் வரை இந்தத் தேக்கத்தை உணரலாமே? மிகவும் பிடித்த எழுத்தாளரின் எழுத்து, நடிகரின் படம், இசை எல்லாமே போதுமென்றாகிறதே? சிறு வயதில் மிகவும் பிடித்த வெண்டைக்காய் இப்போது வேண்டாமென்று படுகிறதே? குறுகிய ஓய்வு சில சமயம் புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என்கிறார்கள். சில பதிவர்கள் வருடந்தோறும் இரண்டு மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.
தேடல்களில் சோர்ந்து போவது தேடுவதால் அல்ல என்பது என் எண்ணம்.
நல்ல ஆய்வு.
சொன்னது அனைத்தும் 100 % உண்மை ..!!
நானும் நடுவில் ஒன்னறை மாதம் எழுதாமல் விட்டிருந்தேன் . நண்பர்களின் அன்பினால் திரும்பவும் வந்து விட்டேன் .!! எது வரை போகிறது பார்க்கலாம் ..!! :-))
அப்பாதுரை said...
சிலருக்குப் பாட வரும்; சிலருக்கு ஆட வரும்; சிலருக்குப் படிக்க வரும்; சிலருக்கு எழுத...
வடிகால் என்ற கருத்து சரி////
சரியான, செறிவான கருத்து சார். வரிக்கு வரி சரியாக சொல்லி இருக்கிறிர்கள் அப்பாதுரை சார்.
ஜெய்லானி said...
சொன்னது அனைத்தும் 100 % உண்மை ..!!
நானும் நடுவில் ஒன்னறை மாதம் எழுதாமல் விட்டிருந்தேன் . நண்பர்களின் அன்பினால் திரும்பவும் வந்து விட்டேன் ///
மகிழ்ச்சி ஜெய்லானி சார் தொடர்ந்து எழுதுவதற்கு.
தமிழ்...சுகம்தானே.அன்பான தீபாவளி வாழ்த்துகள்.
சொன்ன அத்தனையுமே உண்மை.
பொழுதுபோக்காகவும் மனப்பாரங்களைக் குறைக்கவென்றும் தொடங்கி இப்போ அதுவே பெரும் பாரமாகி இருக்கிறது.தொடவும் முடியாமல் விடவும் முடியாமல் மனங்களை இணைக்கும் ஒரு பாலமாகிவிட்டிருக்கிறது இந்த இணையத்தளம்.தொடர்வோம் பதிவுகளோடு !
ஹேமா said...
தமிழ்...சுகம்தானே.அன்பான தீபாவளி வாழ்த்துகள்.
தொடவும் முடியாமல் விடவும் முடியாமல் மனங்களை இணைக்கும் ஒரு பாலமாகிவிட்டிருக்கிறது இந்த இணையத்தளம்.தொடர்வோம் பதிவுகளோடு !,...////
மிக்க மகிழ்ச்சி ஹேமா கருத்துக்கு.
எனக்கும்...ஏன் எல்லோருக்குமே தோன்றுவதுதான் ரமேஷ்... ஒரு இடைவெளி சரியாக்கலாம். எழுதியே ஆக வேண்டும் என்று எண்ணாமல் தோன்றும்போது எழுதலாம். "சிலர் சிறப்பாக எழுதுவதைப் பார்க்கும்போது..." உண்மைதான். நான் உங்களைக் கூட அந்த லிஸ்ட்டில்தான் வைத்திருக்கிறேன். நீங்கள், அப்பாதுரை, வசந்த், ஹேமா, ...
மிகவும் அருமையான பதிவு.
மிகவும் விருப்பமான செயலில் கூட சில நேரம் சலிப்பு வருவது இயற்கைதான். வெறுப்பு வராமல் பார்த்துக்கொள்வதுதான் மிகவும் அவசியம். சலிப்பு ஒரு சின்ன இடைவெளியில் சரியாகிவிடும். எந்த வடிகாலும் இல்லாமல், சலிப்பை வளரவிட்டு, அது வெறுப்பானால் பின் வாழ்வதே வெறுப்பாகி விடும்.
வாழ்க்கை எல்லோருக்கும் அனுபவங்களை கொடுப்பதில்லை. அடிபட்டவர்கள், காலம் கற்று கொடுத்த பாடத்தை அனுபவித்தவர்கள் தான் எழுத வேண்டுமென்றால் ஒரு சதவிதம் பேர் கூட எழுத முடியாது. நமக்கென்ன எழுத வருகிறதோ அதை எழுதலாம். நான் அப்படி தான் எழுதுகிறேன். நகைசுவையாக எழுத வராது என்பதல்ல. இப்படியே எழுதி பழகிவிட்டது. கவிதைகள் நிறைய எழுதி வைத்துள்ளேன். ஏனோ பதிவிட மனமில்லை. இப்படியாக தொடர்கிறது அவரவர் எழுத்து பயணம்.
......உங்கள் கவிதைகளையும் வாசிக்க ஆவலாய் உள்ளோம்..... நிச்சயம், கருத்து செறிவுடன் இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. சீக்கிரம் பதிவிடுங்கள்.
ஸ்ரீராம். said...
எனக்கும்...ஏன் எல்லோருக்குமே தோன்றுவதுதான் ரமேஷ்... ஒரு இடைவெளி சரியாக்கலாம். ';.////
சரியாக்கலாம். சரியாக்க வேண்டும். சரியாக்குவதில் தான் நம் வெற்றி உள்ளது என்று சொல்லலாமோ.
மீனாக்ஷி said...
மிகவும் அருமையான பதிவு.
மிகவும் விருப்பமான செயலில் கூட சில நேரம் சலிப்பு வருவது இயற்கைதான். .///
மிக மிக அருமையாக சொல்லி இருக்கிறிர்கள் மீனாக்ஷி
Chitra said...
வாழ்க்கை எல்லோருக்கும் அனுபவங்களை கொடுப்பதில்லை.;.///
நன்றி சித்ரா... லேடீஸ் ஸ்பெஷலில் தங்கள் படைப்பு வந்ததற்கு வாழ்த்துகள்.
அருமையான பாடல் ரமேஷ். இதே படத்தில் வரும் 'ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன' என்ற பாடலை கேட்டிருக்கிறீர்களா? நான் இன்றும் மிக மிக ரசித்து கேட்கும் எஸ்.பீ.பீ. பாடலில் இதுவும் ஒன்றும். நீங்கள் கேட்டதில்லை என்றால் கேளுங்கள். எஸ்.பீ.பீ. குரலை இந்த பாடலில் நீங்களும் மிகவும் ரசிப்பீர்கள்.
http://sangeethouse.com/jukebox.php?songid=57361
மீனாக்ஷி said...
அருமையான பாடல் ரமேஷ். இதே படத்தில் வரும் 'ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன' என்ற பாடலை கேட்டிருக்கிறீர்களா? ,////
வருகைக்கு, ரசிப்புக்கு மகிழ்ச்சி மீனாட்சி. நானும் அந்த பாடலை கேட்டு மகிழ்ந்து உள்ளேன். அற்புதமான பாடல்
//வாழ்க்கை எல்லோருக்கும் அனுபவங்களை கொடுப்பதில்லை. அடிபட்டவர்கள், காலம் கற்று கொடுத்த பாடத்தை அனுபவித்தவர்கள் தான் எழுத வேண்டுமென்றால் ஒரு சதவிதம் பேர் கூட எழுத முடியாது. நமக்கென்ன எழுத வருகிறதோ அதை எழுதலாம்.//
அருமை ! வலை பூ எழுதாளர்களின் மனதை வெளிபடுத்துகிறது இந்த பதிவு ... ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் இப்போது இல்லை தான்... உங்களுடைய இந்த பதிவு என்னை மாற்றிக்கொள்ள உதவியது ... நன்றி !!
Post a Comment