அலமாரியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, கண்ணில் அந்த காஸெட் தட்டுப்பட்டது. எடுத்து பார்த்தேன். ரிக்கார்டிங் செய்யப்பட்டிருந்த காஸெட் அது. இன்னும் டெலிவரி செய்யப்படாதது.
யாருடைய காஸெட் அது? காஸெட் கவரைப் பிரித்து, படப் பாடல்கள் எழுதியுள்ள பேப்பரை பார்த்தேன். "சுரேஷ், படித்துறை தெரு" என்று எழுதி இருந்தது. கடைசி தேதியை பார்த்தேன். இரண்டு மாதத்துக்கு முன்னால் இருந்த ஒரு தேதி. காஸெட்டை வாங்க மறந்துவிட்டாரா?அந்த காஸெட்டின் சொந்தக்காரர் சுரேஷ் ஞாபகத்துக்கு வந்தார். இதுவரை மூன்று காஸெட்டுகள் ரிக்கார்ட்டிங் செய்ய கொடுத்ததாக ஞாபகம். எல்லா வாடிக்கையாளர்களையும் ஞாபகத்தில் வைத்து கொள்ள முடியாது. ஆனால் ஒரு சிலர் ஞாபகத்தில் பதிந்துவிடுவார்கள். காரணம் - அவர்களின் ரசனை, பேச்சு மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருக்கும்.
சுரேஷ் கூட தன் வித்தியாசமான அணுகுமுறையால் தான் என் ஞாபகத்தில் இருக்கிறார் என்று தோன்றியது. அதனால் தான் காஸெட்டில் பெயரை பார்த்ததும், அந்த மனிதரின் ஞாபகம் சட்டென்று பூத்துவிட்டது.
ஒரு வருடத்துக்கு முன் இருக்கலாம். இந்த சுரேஷ் ஒரு நாள் ரிக்கார்டிங் சென்டருக்கு வந்தார். ஒரு காஸெட்டை கொடுத்து - மொத்தமே இரண்டே இரண்டு பாடல்களை மாத்திரம் பதியும்படி கூறினார். ஏ சைடு ஒரு பாடல்... பி சைடு ஒரு பாடல். ஒரே பாடலை மீண்டும் மீண்டும் ஏழெட்டு தரம் பதிவு செய்யும்படி கூறினார்.
அவர் எழுதி கொடுத்த அந்த இரண்டு பாடல்களை வாசித்தேன். ஏ சைடு, "நான் ஒரு ராசியில்லா ராஜா"... பி சைடு "அமைதிக்கு பெயர் தான் சாந்தி..."
"என்ன சார் இது. ஒரே பாட்டை திரும்ப திரும்ப ரெக்கார்ட் பண்ண சொல்றிங்க" என்று கேட்டேன். சிரித்தார்... "சாந்திங்கிற பெண்ணை லவ் பண்றிங்களாக்கும்" என்று அவர் வாயை கிளறினேன்.
அதற்கும் சிரித்தார். பிறகு சொன்னார். "லவ் பண்ணினேன் சார். ஃபெயிலியர் ஆச்சு" என்றார். "அதானே பார்த்தேன். இந்த சாந்தி பாட்டு எந்த படம்னு தெரியுமா?" என்று கேட்டேன்.
"ரயில் பயணங்களில்"
"அதான் - ரயில் தண்டவாளம் மாதிரி சேர முடியாமப் போச்சா? அந்த பாட்டுல சாந்திங்கிற பேர் எத்தனை முறை வரும்ன்னு தெரியுமா?" என்று கேட்டேன். பதிலை எதிர்பார்க்காது ஒரு சாதாரணக் கேள்வியாகத் தான் இதை கேட்டேன்.
ஆனால் அவரோ, "தெரியும் சார்... நாற்பத்திஐந்து முறை." என்றதும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன். ரெம்பவும் சீரியஸாகத்தான் லவ் பண்ணி இருப்பார் போலும் என்று தோன்றியது.
அந்த சாந்தி பாடல் காரணத்தினால் அவரை என்னால் ஞாபகம் வைத்து கொள்ள முடிந்தது. அதற்கு பிறகு சில முறை வந்து காதல் தோல்வி பாடல்களாக ரிக்கார்டிங் செய்து கொண்டு போனார். இவரை போலவே நிறைய பேர் உண்டு. இவர்களோடு பழகுவது ஒரு சுவராசியமான அனுபவம் தான்.
அப்புறம் வெகு நாட்களுக்கு அவரை காணோம. சமீபத்தில் இரண்டு மாசத்துக்கு முன் அவர் மீண்டும் வந்தார். இதோ, இப்போது அலமாரியில் எடுத்த காஸெட்டை தான் கொடுக்க வந்தார். சட்டென்று அவர் பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை. அதனால், "வாங்க சாந்தி சார்" என்றதும் கோபப்படாமல் என் கிண்டலை ரசித்தார். "ஸாரி சார். உங்க பேர் சட்ன்னு ஞாபகத்துக்கு வரல - அதான்" என்றேன்.
அதற்கும் சிரித்தார். இந்த காஸெட்டை கொடுத்து, ரிக்கார்டிங் செய்ய வேண்டிய பாடல்களின் லிஸ்டை நீட்டினார். எல்லாமே எண்பதுகளில் வந்த இளையராஜாவின் பாடல்கள். "என்ன சார்... எல்லாமே சந்தோஷமான பாடல்களா இருக்கு" என்று கேட்டேன்.சிரித்தார்... "எனக்கு கல்யாணமாயிடுச்சு. என் மனைவிக்காகத்தான் இந்த காஸெட். அவங்களுக்கு இதுல எழுதி இருக்கிற பாடல்கள் எல்லாம் ரெம்ப பிடிக்கும்.
நல்லா ரெக்கார்டிங் பண்ணுங்க. என் மிஸஸ் அசரணும்" என்றார்.
"ரெம்ப சந்தோஷம். மேரேஜ் ஆயிடுச்சுன்னு சொல்றிங்க. உங்க மிஸஸ் - அந்த சாந்தி பாடலை கேட்டா கோபிக்க போறாங்க" என்றேன். அதற்கும் சிரித்தார். பிறகு சொன்னார். "என் மிஸஸ் அந்த பாட்டை கேட்டாங்க. பிறகு நானே என் லவ் மேட்டரை சொன்னேன். பெரிசா எடுத்துக்கலை "
"உங்க மிஸஸ் பேரை தெரிஞ்சுக்கலாமா?"
"தாராளம்மா. ஆனந்தி"
"அப்ப., ஆனந்திங்கிற பேர்ல ஒரு பாட்டு இருக்கே. அதையும் ரிக்கார்டிங் பண்ணிடலாமா?"
"ஆனந்தம் வந்ததடி ஆனந்திங்கிற பாடலா, ம்... பண்ணுங்க..."
ஏன் காஸெட் வாங்க வரவில்லை. இவ்வளவு நாளாகியும். மறந்துவிட்டாரா? அதெப்படி மறப்பார். முன்னெல்லாம் ரெக்கார்டிங் பண்ணி முடிப்பதற்குள்ளாகவே, "என்ன சார் ரெக்கார்டிங் பண்ணிட்டீங்களா" என்று வந்து கேட்பார்.
ஏனோ எனக்கு அவரை பார்க்க வேண்டும் போல் தோன்றியது. காஸெட்டை கொடுத்துவிட்டு பார்த்து வரலாமா? இதுவரை எந்த வாடிக்கையாளர் வீட்டுக்கும் சென்றது இல்லை. இவர் வாடிக்கையாளர் என்கிற ஸ்தானத்தையும் தாண்டி நண்பராக நெருங்கி விட்டாரே.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காஸெட்டை எடுத்து கொண்டு கொடுக்கச் சென்றேன். அவர் சொன்ன விலாசம் ஒரு சின்ன சந்து. அதற்குள் நுழைந்தேன்.
டோர் நம்பரை பார்த்தேன். ஆறாம் நம்பர் வீட்டின் முன் நின்றேன். கதவை தட்டினேன். கதவு திறந்தது. வயதான ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.
"யார் சார் வேணும்"
"இங்க சுரேஷ்ங்கிறவரை பார்க்கணும்" என்றேன். அவர் என்னையே உற்று பார்த்தார். "இந்த வீடு தானே" என்று முகவரி எழுதி இருந்த காகிதத்தை காட்டினேன். அவர் வாங்கி உற்று பார்த்தார். பின்பு கதறி, கதறி அழ ஆரம்பித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவரது அழுகை மனதை பிசைந்தது. அழுகை சத்தம் கேட்டு வயதான பெண்மணி ஒருத்தியும், ஒரு இளம்பெண்ணும் வந்தனர்.
""மேடம். சுரேஷ்ங்கிறவர் என் கடையில் இந்த காஸெட்டை ரிக்கார்டிங் பண்ண கொடுத்தார். ரெம்ப நாளா வாங்க வரலை. மறந்துட்டார் போலும். அதான் கொடுத்துட்டு போக வந்தேன். இவர் கிட்டே விசாரிச்சா அழுறார்"
அந்த இரண்டு பெண்களும் கண்கலங்க ஆரம்பித்தனர். மனசில் ஒரு பாரம் ஏறியது. என்னாயிற்று.? "சார்" என்று அழைத்தேன்.
பெரியவர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு காஸெட்டை வாங்கி கொண்டார்.
"தம்பி. சுரேஷ் வேலை விஷயமா ஊருக்கு போனான். சுரேஷ் போன டிரெயினில் குண்டு வெடிச்சு எங்க சுரேஷ்..." கொஞ்ச நேரம் நின்றிருந்த அழுகை மீண்டும் வெடித்தது. அற்புதமான ஒரு மனிதரின் உயிரை குண்டு பறித்துவிட்டதா? வெடிகுண்டுக்கு தெரியுமா? யார் நல்லவர், யார் தீயவர் என்று? மனிதர்களுக்கே இனம் பிரிக்க தெரியாத போது.
சுரேஷின் சிரித்த முகம் நெஞ்சில் நிழலாடியது. அந்த கேஸட் கைகளில் தூக்க முடியாத சுமையாக.
ஆனந்தவிகடனில் 98ம் வருஷம் "மனைவிக்காக ஒரு காஸெட்" என்கிற தலைப்பில் வந்த என் கதை.

30 கருத்துரைகள்:
//அற்புதமான ஒரு மனிதரின் உயிரை குண்டு பறித்துவிட்டதா? வெடிகுண்டுக்கு தெரியுமா? யார் நல்லவர், யார் தீயவர் என்று? மனிதர்களுக்கே இனம் பிரிக்க தெரியாத போது.//
அற்புதமான வரிகள்!
என்னது கதையா? உயிரோட்டமுள்ளதாக இருக்கிறது. நிஜம் என்றே நம்பினேன்.
ஐயோ நெஞ்சை கதரவைக்குதே, குண்டுக்கு தெரியுமா யார் நல்லவன் கெட்டவன்னு, ஏ வெடிகுண்டே உனக்கு ஒரு வெடிகுண்டு வாராதா...???
ஒரு சிறுகதை என்று சொன்னாலும்
அதை மிக சரியாக நகர்த்திச் செல்வதற்காக
தாங்கள் மெனக்கெட்டிருப்பது புரிந்து கொள்ள முடிகிறது
அதனால்தான் அது கதை என்கிற நிலையைத் தாண்டி
ஒரு நல்ல அனுபவமாக நிஜமாக
படிப்பவர்கள் மனதில் நிறைகிறது
அருமையான கதை
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
த.ம 2
அப்பாவி மனிதரை அநியாயமாகப் பலிவாங்கும் குண்டுவெடிப்பை அக்காலத்தைய காசட்டில் பாடல் பதிந்து வாங்கும் பின்னணியுடன் சேர்த்துச் சொல்லியிருப்பது நன்று. விகடன் வெளியீட்டுக்கு வாழ்த்துக்களும்.
அருமையான சிறுகதை..
வாழ்த்துக்கள்..
அருமையான சிறுகதை
அருமையான சிறுகதை
இன்று என் வலையில்
நாஞ்சில் மனோ Vs கருண் Vs சி.பி – யார் அதுல பெரிய ஆள்?
சில எதிர்பாரா அதிர்ச்சிகள் இப்படி நம்மைத் தாக்கும்போது நிலைகுலைந்துதான் போவோம். கதை என்றாலும், சோகம் மறந்து பாசிடிவ் எண்ணத்துடன் வாழ்வில் செட்டில் ஆகும்போது வரும் இம்மாதிரி முடிவுகள் இறைவனின் கொடுந்தீர்ப்புகள்.
கதை மிக நன்றாக இருக்கு பாஸ்..
ஆனந்த விகடனில் வந்ததா..?? வாழ்த்துக்கள் பாஸ். ஆனந்த விகடனில் வரும் ஆக்கங்கள் மிக தரானதே... இதற்க்கு உங்க இந்த சிறுகதையும் ஒரு நல்ல உதாரணம்...... சூப்பர் பாஸ்
வெகு இயல்பான நடையில் அருமையான கதை. முடிவில் உள்ள சோகம் மனதை தாக்கியது.
மரணமும் ஒரு வரம்தான். வேண்டுவோருக்கு கிடைப்பதில்லை.
கதையின் நகர்வு மிக அருமை. பாட்டு, கேஸட் என்று பழைய விசயமாக வருகிறதே என்று பார்த்தேன், 98ம் வருடக்கதை. ஆனந்தவிகடனின் அங்கீகாரம் பெற்ற கதை. அருமை.
படிச்சுக்கிட்டே வரும்போதே, இது ஏற்கெனவே படிச்ச கதையாக இருக்கேன்னு நினைச்சபடியே படிச்சேன். கடைசிலதான் தெரிஞ்சது விஷயம். இரண்டாவது முறை படிச்சாலும், புதுசா படிக்கிற மாதிரியே விறுவிறுப்பா இருந்துதுங்ணா!
Nagasubramanian said...
என்னது கதையா? உயிரோட்டமுள்ளதாக இருக்கிறது. நிஜம் என்றே நம்பினேன்.,/////
நன்றி நாகா கருத்துரைக்கு.
MANO நாஞ்சில் மனோ said...
ஏ வெடிகுண்டே உனக்கு ஒரு வெடிகுண்டு வாராதா...???/////
உண்மையாக சொல்லிவிட்டீர்கள் மனோ உள்ள குமுறலை.
Ramani said...
ஒரு சிறுகதை என்று சொன்னாலும்
அதை மிக சரியாக நகர்த்திச் செல்வதற்காக
தாங்கள் மெனக்கெட்டிருப்பது புரிந்து கொள்ள முடிகிறது
அதனால்தான் அது கதை என்கிற நிலையைத் தாண்டி
ஒரு நல்ல அனுபவமாக நிஜமாக
படிப்பவர்கள் மனதில் நிறைகிறது
அருமையான கதை
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி/////
நன்றி சார் அருமையான கருத்துரைக்கு.
ராமலக்ஷ்மி said...
அப்பாவி மனிதரை அநியாயமாகப் பலிவாங்கும் குண்டுவெடிப்பை அக்காலத்தைய காசட்டில் பாடல் பதிந்து வாங்கும் பின்னணியுடன் சேர்த்துச் சொல்லியிருப்பது நன்று. விகடன் வெளியீட்டுக்கு வாழ்த்துக்களும்./////
நன்றி ராமலெஷ்மி மேடம் கருத்துரைக்கு.
வேடந்தாங்கல் - கருன் *! said...
அருமையான சிறுகதை..
வாழ்த்துக்கள்..////
நன்றி கருன்.
என் ராஜபாட்டை"- ராஜா said...
அருமையான சிறுகதை..//
நன்றி நன்றி ராஜா.
ஸ்ரீராம். said...
சில எதிர்பாரா அதிர்ச்சிகள் இப்படி நம்மைத் தாக்கும்போது நிலைகுலைந்துதான் போவோம். கதை என்றாலும், சோகம் மறந்து பாசிடிவ் எண்ணத்துடன் வாழ்வில் செட்டில் ஆகும்போது வரும் இம்மாதிரி முடிவுகள் இறைவனின் கொடுந்தீர்ப்புகள்..//.//
ஆமாம். எதிர்பாராத சம்பவங்கள் வாழ்க்கையை நிலைகுலைய வைத்துவிடும்.
துஷ்யந்தன் said...
கதை மிக நன்றாக இருக்கு பாஸ்..
ஆனந்த விகடனில் வந்ததா..?? வாழ்த்துக்கள் பாஸ்.//////
நன்றி, மகிழ்ச்சி துஷ்யந்தன் வருகைக்கு.
மீனாக்ஷி said...
வெகு இயல்பான நடையில் அருமையான கதை. முடிவில் உள்ள சோகம் மனதை தாக்கியது.
மரணமும் ஒரு வரம்தான். வேண்டுவோருக்கு கிடைப்பதில்லை..//////
வாழ நினைப்பவர்களையே மரணம் துரத்துகிறது.
சாகம்பரி said...
கதையின் நகர்வு மிக அருமை. பாட்டு, கேஸட் என்று பழைய விசயமாக வருகிறதே என்று பார்த்தேன், 98ம் வருடக்கதை. ஆனந்தவிகடனின் அங்கீகாரம் பெற்ற கதை. அருமை...//////
நன்றி சாகம்பரி கருத்துரைக்கு.
கிருபாநந்தினி said...
படிச்சுக்கிட்டே வரும்போதே, இது ஏற்கெனவே படிச்ச கதையாக இருக்கேன்னு நினைச்சபடியே படிச்சேன். கடைசிலதான் தெரிஞ்சது விஷயம். இரண்டாவது முறை படிச்சாலும், புதுசா படிக்கிற மாதிரியே விறுவிறுப்பா இருந்துதுங்ணா!//////
நன்றி கிருபாநந்தினி கருத்துரைக்கு.
அருமையான சிறுகதை..கதை சூப்பர் பாஸ்
கதையின் போக்கில் நிதானம் இருந்தாலும் உலுக்கியது என்னவோ உண்மை.
வைரை சதிஷ் said...
அருமையான சிறுகதை..கதை சூப்பர் பாஸ்//////
வைரை சதிஷ் நன்றி வருகைக்கு.
அப்பாதுரை said...
கதையின் போக்கில் நிதானம் இருந்தாலும் உலுக்கியது என்னவோ உண்மை.//////
அப்பாதுரை சார். இந்த சிறுகதையை இனறைய காலகட்டத்தில் எழுதி இருந்தால் - இன்னும் சிறப்பாக எழுதி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.
நெஞ்சைத் தொடும் கதை .வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
எனக்கும் அந்த எண்ணம் தோன்றியது!
தீவிரவாத வளர்ச்சி ஒரு புறம் - உறவுகளின் விரிசல்கள் இன்னொரு புறம். இக்காலத்துக்கு இன்னும் மெருகாக அமைந்திருக்கும்.
Post a Comment