உள்முகம்...(1) ......சிறுகதை.

Thursday, November 10, 2011



பெரியப்பாவின் பிள்ளை கல்யாணத்துக்குப் போனபோது, அந்த கல்யாண மண்டபத்தின் பிரம்மாண்டம் மயக்கத்தை ஏற்படுத்தியது எனக்கு. இந்த ஆடம்பரத்தை காணவேண்டும், இந்த பிரம்மாண்டத்தை காண வேண்டும் என்பதால் தான் அப்பாவும், அம்மாவும் கல்யாணத்துக்கு வரமாட்டோம் என்றி கூறிவிட்டார்கள்.

இரவெல்லாம் பஸ்ஸில் தூங்காமல் பயணித்ததால் கண்கள் எரிந்தன. பஸ் ஸ்டாண்டில் இருந்த மாநகராட்சி குளியலறையில் குளித்துவிட்டு வந்தபோதும் தூக்கக் கலக்கமாக இருந்தது. மண்டபத்துக்குள் நுழைந்தபோது வாசலையொட்டி இருந்த மேஜையில் சந்தன கிண்ணமும், குங்குமத்தட்டும் இருந்தது. நாலைந்து டீன்ஏஜ் பெண்கள் பன்னீர் தெளித்து கொண்டும், கலகலவென சிரித்து கொண்டும் நின்றார்கள்.

நீலநிற சுடிதார் அணிந்த பெண்ணை மட்டும் அடையாளம் தெரிந்தது. பெரியப்பா மகள் ஹேமா. என்னை பார்த்ததும் பார்க்காத மாதிரி இருப்பது போல தோன்றியது. ஒரு வேளை என்னை அடையாளம் தெரியவில்லையோ? அதெப்படி ஞாபகம் இல்லாமல் போகும். அவள் தான் அடையாளம் கண்டு கொள்ள முடியாதபடி வளர்ந்திருக்கிறாள். அவளையே அடையாளங் கண்டு கொள்ள முடிகையில். அவளால் என்னை அடையாளங் கண்டு கொள்ள முடியாத என்ன?

சந்தனத்தை பூசி கொண்டு உள்ளே நுழைந்தேன். அலங்கரிக்கப்பட்ட மணமேடையை சுற்றி குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். கல்யாண வீடென்றால் குழந்தைகளுக்கு குதூகலந்தான். ஹாலில் பரப்பி இருந்த நாற்காலியில் பாதிக்கு பாதி ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். யாரையும் எனக்கு அடையாளம் தெரியவில்லை. அவர்களுக்கு ஒரு வேளை, "நான் இன்னார் பையன்" என்று தெரிந்திருந்தாலும் தெரிந்திருக்கலாம்.

எல்லோரும் பணக்கார உறவினர்கள். பெரியவர்கள் வெள்ளை வேஷ்டி மற்றும் பட்டு வேஷ்டியிலும், நடுத்தர வயதுள்ளவர்கள் சபாரியிலும், இளைஞர்கள் ஜீன்ஸ் பாண்ட், டீ-சர்ட்டிலும் இருந்தார்கள். சட்டென்று என்னை பார்த்து கொண்டேன். சாதாரண பேண்ட் ஷர்ட் தான். லேசாக கசங்கியிருந்தது.

ஒரு நாற்காலியில் உட்கார்ந்தேன். குசுகுசுவென்று பேசி கொண்டிருந்தார்கள். தனித்து விடப்பட்ட மாதிரி இருந்தது. ஏற்கனவே நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன் தான். தாலி கட்டி முடிந்ததும் மொய் கொடுத்துவிட்டு மண்டபத்தை விட்டு ஓடி விடவேண்டும் போல் இருந்தது.

பெண்கள் பக்கம் பார்த்தேன். பட்டு சேலைகள், கழுத்து நிறைய நகைகள், வாய் நிறைய புன்னகைகள் என்று பெண்கள்... இத்தகையவர்களுக்கு மத்தியில் தான் இருக்க முடியாதென்று தான் அம்மா கல்யாணத்துக்கு வர மாட்டேன் என்று மறுத்தாளோ?

"ஆமா. உங்க அண்ணன் வசதியா இருக்கார். அங்க வெறுங்கழுத்துடன் நான் போய் நிற்கவா? நான் கல்யாணத்துக்கு வரமுடியாது. நீங்க என்ன எனக்கு நகையும், பவுனும் செஞ்சு போட்டா இருக்கீங்க. ஊர் முழுக்க போய் காட்ட" என்றாள். அம்மாவிடம் ஒரு செயின் கூட இல்லை. அதனாலேயே வசதியான சொந்தக்காரர்களின் கல்யாணத்துக்கு போக மாட்டாள். இதற்காக அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சண்டை சச்சரவு ஏற்படும்.

"ஆம்பளைக்கென்ன... கிழிஞ்ச சட்டையை கூட துண்டு போட்டு மூடிட்டு போயிடலாம். பொம்பளைங்க அப்படி போக முடியுமா?" என்பாள். "சரி. நீ போகவே வேண்டாம். சேகர்... நீ மட்டும் போயிட்டு வா." என்றார் அப்பா. பணம் பணத்தோடு சேரும். பதவி பதவியோடு சேரும். அப்பாவுக்கும் வருத்தம் உண்டு. அண்ணன் தம்பிகள் போல நிறைய சம்பாதிக்க முடியவில்லையே என்று. "நீ சின்ன பையன் தானே. உன்கிட்ட பேச யாரும் கௌரவம் பார்க்க மாட்டாங்க" என்றார்.

நானொன்றும் சின்னப் பையன் இல்லை. கிராஜுவேட். தற்சமயம் ஒரு ஆட்டோமொபைல் ஷாப்பில் அக்கவுண்டண்டாக உள்ளேன். அப்பா, அம்மாவுக்கு தர்மசங்கடத்தை கொடுக்க விரும்பவில்லை. "கிளம்புறேன்" என்றேன்.

சென்னையில் திருமணம். சென்னைக்கு செல்ல முடிகிறதே என்ற சந்தோஷம். பெரியப்பாக்களும், சித்தப்பாக்களும் சென்னையில் கடை வைத்து ரெம்ப வசதியாக இருக்கிறார்கள். "கட்டின வேட்டி சட்டையோட பெரியப்பா மெட்ராஸுக்கு போனார், முப்பத்தி அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி. அங்க இங்க எடுபிடி வேலை பார்த்து எப்படியோ கஷ்டப்பட்டு முன்னேறி இன்னிக்கு நல்லா இருக்கார். மேல போக, போக எல்லா தம்பிகளையும் கூப்பிட்டு ஆளுக்கு ஒரு கடை வைச்சு கொடுத்தார்"

"என்னையும் கூப்பிட்டார். தாத்தா போக விடலை. போய் இருந்தா இன்னிக்கு நானும் ஒரு ஆளா வளர்ந்திருப்பேன். இன்னிக்கு சொந்தக்காரங்க எவனும் மதிக்க மாட்டேங்கிறாங்க" என்பார் அப்பா.

எனக்கென்னவோ சொந்தக்காரர்கள் மதிக்க மாட்டேன் என்று சொல்வது - சற்று மிகையான வார்த்தைகளோ என்று தோன்றும். இன்று அவரவருக்கு ஆயிரம் வேலைகள். அவரவர் குடும்பங்கள். முப்பத்தைந்து வருஷத்துக்கு முன் நெருங்கி பழகியதை போன்று இன்று பழக முடியுமா? கடமைகள், வேலைகள் கழுத்தை இறுகப்பிடிக்கும்போது - சொந்தமாவது, பந்தமாவது. எங்காவது பார்த்தால் சிரிப்பதோடு முடிந்துவிடுகிறது - பாசமும், நேசமும்...

சென்னைக்கு செல்ல தயாரானேன்.

தொடரும்.

ஆனந்தவிகடனில் (1999) வெளியான சிறுகதை. 

28 கருத்துரைகள்:

ராமலக்ஷ்மி said...

தொடருங்கள். யதார்த்த உலகை உள்ளது உள்ளபடி காட்டுவதைக் காண(எழுத்து நடை காணவே வைக்கிறது)க் காத்திருக்கிறோம்.

விகடன் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள். படத்துடன் பகிர்ந்தமைக்கும் நன்றி!

பாலா said...

வாழ்த்துக்கள். நண்பரே. எதார்த்தமான கதை.

மனோ சாமிநாதன் said...

வாழ்க்கையின் யதார்த்த நிலையை கதைக்களனாகக் கொண்டு அருமையாக சென்று கொன்டிருக்கிறது கதை!!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இப்போது பணக்கார விட்டு திருமணங்களை கண் முன்னே நிறுத்துகிறது..

வாழ்த்துக்கள்..

ஸ்ரீராம். said...

சூழ் நிலையுடன் ஒன்றி விட்டேன். தொடருங்கள்.

Ramani said...

கதையின் கருவும் சொல்லிச் செல்லும் விதமும் அருமை
தொடர வாழ்த்துக்கள் த.ம 5

தமிழ்வாசி - Prakash said...

சிறந்த கதை நண்பரே. விகடனில் வந்ததை இங்கே பார்வைக்கு பகிர்ந்தமைக்கு நன்றி.


நம்ம தளத்தில்:
வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

MANO நாஞ்சில் மனோ said...

விகடனில் வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள் மக்கா...!!!

கதை சுவாரஸ்யம்...!!!

சி.கருணாகரசு said...

தெளிவான நீரோட்டமாய் நகர்கிறது கதை.... தொடருங்கள்.

M.R said...

அருமையான கதை ,யதார்த்த அர்த்தம்

தொடர்கிறேன் தொடருங்கள்

த.ம 6

தமிழ் உதயம் said...

ராமலக்ஷ்மி said...

தொடருங்கள். யதார்த்த உலகை உள்ளது உள்ளபடி காட்டுவதைக் காண(எழுத்து நடை காணவே வைக்கிறது)க் காத்திருக்கிறோம்.

விகடன் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள். படத்துடன் பகிர்ந்தமைக்கும் நன்றி!,.////

நன்றி ராமக்ஷமி மேடம். கருத்துக்கு.

தமிழ் உதயம் said...

பாலா said...

வாழ்த்துக்கள். நண்பரே. எதார்த்தமான கதை.////


நன்றி பாலா வருகைக்கு.

தமிழ் உதயம் said...

மனோ சாமிநாதன் said...

வாழ்க்கையின் யதார்த்த நிலையை கதைக்களனாகக் கொண்டு அருமையாக சென்று கொன்டிருக்கிறது கதை!!////

மகிழ்ச்சி மனோ சாமிநாதன் மேடம் வாழ்த்துக்கு.

தமிழ் உதயம் said...

வேடந்தாங்கல் - கருன் *! said...

இப்போது பணக்கார விட்டு திருமணங்களை கண் முன்னே நிறுத்துகிறது..

வாழ்த்துக்கள்..!////

நன்றி கருன் வாழ்த்துக்கு.

தமிழ் உதயம் said...

ஸ்ரீராம். said...

சூழ் நிலையுடன் ஒன்றி விட்டேன். தொடருங்கள்.////

நன்றி ஸ்ரீராம்.

தமிழ் உதயம் said...

Ramani said...

கதையின் கருவும் சொல்லிச் செல்லும் விதமும் அருமை
தொடர வாழ்த்துக்கள் .////

நன்றி ரமணி சார் வருகைக்கு.

தமிழ் உதயம் said...

தமிழ்வாசி - Prakash said...

சிறந்த கதை நண்பரே. விகடனில் வந்ததை இங்கே பார்வைக்கு பகிர்ந்தமைக்கு நன்றி.////

நன்றி தமிழ்வாசி.

தமிழ் உதயம் said...

MANO நாஞ்சில் மனோ said...

விகடனில் வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள் மக்கா...!!!

கதை சுவாரஸ்யம்...!!!////


நன்றி மனோ வாழ்த்துக்கு

தமிழ் உதயம் said...

சி.கருணாகரசு said...

தெளிவான நீரோட்டமாய் நகர்கிறது கதை.... தொடருங்கள்.///


. நன்றி சி.கருணாகரசு.

தமிழ் உதயம் said...

M.R said...

அருமையான கதை ,யதார்த்த அர்த்தம்

தொடர்கிறேன் தொடருங்கள் .///

நன்றி M.R,

ஹேமா said...

தமிழ்...அடுத்தமுகம் காண ஆவல் !

மீனாக்ஷி said...

தலைப்பு மிகவும் பிடித்திருந்தது. அருமையான தொடக்கம். தொடருங்கள்!

Shakthiprabha said...

சுவாரஸ்யம்.

V.Radhakrishnan said...

மிகவும் அருமையான நடையுடன் எழுதப்பட்டு இருக்கிறது. என்ன நடக்கும் என்பதை அறிய ஆவல். பன்னிரண்டு வருடங்கள் முன்னர் ஆனந்தவிகடனில் வெளியானதா? வாழ்த்துகள்.

தமிழ் உதயம் said...

ஹேமா said...

தமிழ்...அடுத்தமுகம் காண ஆவல் ! //////

நன்றி ஹேமா. விரைவில் அடுத்த முகம்.

தமிழ் உதயம் said...

மீனாக்ஷி said...

தலைப்பு மிகவும் பிடித்திருந்தது. அருமையான தொடக்கம். தொடருங்கள்!/////

நன்றி மீனாட்சி.

தமிழ் உதயம் said...

Shakthiprabha said...

சுவாரஸ்யம்./////

நன்றி சக்திபிரபா. வெகுநாள் கழித்து வந்திருக்கிறிர்கள்.

தமிழ் உதயம் said...

V.Radhakrishnan said...

மிகவும் அருமையான நடையுடன் எழுதப்பட்டு இருக்கிறது. என்ன நடக்கும் என்பதை அறிய ஆவல். பன்னிரண்டு வருடங்கள் முன்னர் ஆனந்தவிகடனில் வெளியானதா? வாழ்த்துகள்.////

நன்றி சார். மிக்க மகிழ்ச்சியை தருகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...