ஊதுகுழாயை வைத்து மண்ணெணெய் விளக்கை ஊதி கொண்டிருந்தபோது, சண்முகம் அய்யாவுக்கு நெஞ்சு வலிப்பது போலிருந்தது. லேசாய் கொஞ்ச நேரம் வலித்துவிட்டு, வலி விட்டு விடும் என்று நினைத்தவரை மேற் கொண்டு வேலை செய்யவிடாமல் - நெஞ்சு வலி இம்சிக்க, அந்த வலி - இதுவரை அறியப்படாத வலியாக இருக்க, விளக்கை "ப்பூ" என்று ஊதி அணைத்தபோது, ஜிமிக்கி தோடுக்கு மேல் சொருகி வைத்திருந்த சுரை கீழே விழுந்தது.கண்ணாடியை போட்டு கொண்டு தேடினார். அதுவும் உடைந்த கண்ணாடி தான். இந்த கண்ணாடியை சரி பண்ணலாம் என்று பார்த்தால் மாறி, மாறி ஏதாவது செலவு வருகிறது. வலியை பொருட்படுத்தாமல் தேடினார். கிடைக்கவில்லை. வாசற்கதவு சாத்தி இருந்ததால் வெளியே போக வாய்ப்பில்லை. இருந்தாலும் சில நேரம் கிடைக்காமலே போகும்.
நூறு மில்லி இருக்கும் - அந்த சுரை. இருநூறு ரூபாய். உடைந்த சுரையை பற்ற வைத்து மெருகு போட, ஐம்பது ரூபாய் கூலி. தொலைந்து போனால்... வியர்வை முகமெங்கும் குப்பென்று சுரந்தது.மேஜைப்பெட்டி மேலிருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்தபோது - சுரை பொத்தென்று கீழே விழுந்தது. போன உயிர் திரும்ப வந்தது. கைகாலெல்லாம் நடுக்கமாய் இருந்தது.
எழுபது வயசில், இப்படி யாருமில்லாத அனாதையை போல் கஷ்டப்பட
வேண்டி உள்ளதே என்று நினைத்தவாறே கதவை திறந்தார். காற்று பயங்கரமாய் வீசியதால், கதவை அடைத்து விட்டு மண்ணெணெய் விளக்கை ஏற்றினார். வாசற்கதவை திறந்தபோது, வாசலில் பணியாரம் விற்கும் மீனாட்சி பாட்டி உட்கார்ந்திருந்தாள். தன் வயதிருக்கும். ஊருக்கே மீனாட்சி பாட்டியாக இருப்பதால், தனக்கும் மீனாட்சி பாட்டியாகி விட்டாள் என்று அந்த நெஞ்சு வலியிலும் சிரித்து கொண்டார்.
கதவை திறந்து வைத்து விட்டு படியில் உட்கார்ந்தார். மீனாட்சி பாட்டி கடைசிபடியில் காலை நீட்டி உட்கார்ந்திருந்தாள். "என்னங்கய்யா முகமெல்லாம் இப்படி வேர்த்து போயி, ஆளே ஒரு மாதிரியா இருக்கீங்க"
"ஒரு ஜிமிக்கி தோடு சொரை உடைஞ்சு போச்சு. ரிப்பேர் பண்ணி கொடுங்கன்னு நம்ம ஸ்கூல் டீச்சர் கொடுத்தாங்க. அத எடுத்து சரி பண்ணிட்டு இருந்தேன். தாங்க முடியாத நெஞ்சு வலி" என்று நெஞ்சை தேய்த்து கொண்டார்.
"நாலு பசங்கன்னு சொன்னீங்க. ஒருத்தன் கூடவா கஞ்சி ஊத்த மாட்டேன்னுட்டான். இப்படி வயசான காலத்துல - டவுனுல இருந்து வந்து இந்த கிராமத்துல பொழப்பு பார்க்கிறிங்க"
"காலையில நம்ம ஊருல இருந்து அம்பது பேரு டவுனுக்கு வேலைக்கு போறாங்க. நீங்க ஒரு ஆளு தான் டவுனுல இருந்து இங்க வேலைக்கு வர்றிங்க" என்று சிரித்தாள்.
"என்ன பண்றது. தலையெழுத்து. இங்க வந்து ஆறுமாசமாச்சு. நாலு நாளைக்கு ஒரு தடவை ஊருக்கு போகும்போது இருநூறு முன்னூறு கொண்டு போறேன். யாராவது வாழைப்பழம், கொய்யாப்பழம்னு பை நிறைய கொடுத்துடுறாங்க - ஊருக்கு போகும் போதெல்லாம். அங்க டவுன்ல இந்த வருமானம் எனக்கில்ல. உங்க ஊரு கருப்பணசாமி என்னைய கை விடல" என்றவர் நெஞ்சோடு கையை அமுக்கி கொண்டார். வலி விடவில்லை.
"எங்க ஊருக்கு வந்து நீங்க நல்லா இருக்கேன்னு சொல்றது பெருமை தான்" என்ற பாட்டி, சேலை முந்திக்குள் வைத்திருந்த தூக்குவாளியை எடுத்து, "ஏழெட்டு பணியாரம் மிஞ்சி போச்சு. சாப்பிடுறிங்களா" என்று கேட்டாள்."வேணாங்க"
"காசெல்லாம் வேணாம். கருகி போனது தான்"
"நெஞ்சு ரெம்ப வலிக்குது. எதுக்கு எண்ணெய் பலகாரத்தை தின்னுகிட்டு. வேணாங்க" என்று திரும்ப நெஞ்சை பிடித்து கொண்டார்.
"ரெம்ப முடியலன்னா வீட்டுப்பக்கம் போங்க. நாமென்ன இளவட்டமா - வலிச்சா தாங்கிக்க. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடப்போகுது" என்று நடந்தாள்.
"ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிட்டா"... நாலுநாளைக்கொரு தடவை, இயல்பாகவே இந்த எண்ணம் வந்து விடுகிறது.
பூட்டிய அறைக்குள் இரவோடிரவாக ஏதாவது ஆகி விட்டால்... யாருக்கு தெரியப் போகிறது. டவுனுக்கு, வீட்டுக்கு போய் இருப்பேன் என்று இந்த ஊர் ஜனம் நினைக்கும். வீட்டிலோ, "ஊரில் வேலை வெட்டி பார்த்து கொண்டிருப்பேன்" என்று நினைத்து கொண்டிருப்பார்கள்.
வீட்டோடு கிடக்கலாம் என்று பார்த்தால், காலை சுற்றிய பாம்பாக தன்னை சுற்றிய துயரங்கள், தன்னை விட மாட்டேன் என்கிறதே. பனிரெண்டு வயசில் - குழந்தை தொழிலாளியாய் துவங்கிய வாழ்க்கை எழுபது வயதிலும் நிம்மதியை தரவில்லை. எந்த ஜோசியரை பார்த்தாலும் - அது கிளி ஜோசியராக இருந்தாலும் சரி, கைரேகை பார்ப்பவராக இருந்தாலும் சரி, கொடுக்கிறதை கொடுங்க - ஜாதகம் பார்த்து சொல்றேன் என்கிற அன்றாடங்காய்ச்சி ஜோசியர் ஆகட்டும்... ஒரு ஜாதகம் பார்க்க அறுபது ரூபாய் என்று கேட்கும் பெரிய ஜோசியர் ஆகட்டும் - எல்லோரும் ஜாதகம் பார்த்து சொன்னது ஒன்றேஒன்று தான்,
"சாகறவரை உங்களுக்கு கஷ்டம் தான் " அது மிக சரியாக தான் நடந்துள்ளது. தப்பித்தவறி கூட எந்த ஜோசியரும் நல்ல விதமாய் சொன்னதில்ல.
பனிரெண்டு வயசில் அப்பா செத்து போக, கிராமத்தில் ரெண்டு அக்கா, ரெண்டு தங்கை, அம்மாவை விட்டு விட்டு, தாய் மாமனோடு கோயம்புத்தூருக்கு பயணம். குலத்தொழிலாய் தங்க வேலை அமைந்தது ஒரு புண்ணியம் தான். கோயம்புத்தூர் தங்கநகை தயாரிப்புக்கு சூடு பிடிக்க துவங்கியது அப்போது தான். வேலை பழகி நாலு காசு சம்பாதிக்க துவங்கியதில் இருந்து - இரண்டு வருஷத்திற்கொரு பொம்பளை பிள்ளையையும் கரையேற்ற வேண்டி இருந்தது.
எல்லாவற்றையும் முடித்து, தனக்கு கல்யாணம் முடிந்த போது முப்பது வயசு. சாமி மீது கோபம் வந்தது - அந்த வயசில் தான். ஒரு மூளை வளர்ச்சி குறைவாக இருந்த பிள்ளையை ஏமாற்றி கட்டி வைத்து விட்டார்கள். பார்க்க லட்சணமாக தான் இருந்தாள். பார்த்த மாத்திரத்தில் கண்டு பிடிக்க முடியாது - அந்த குறைபாட்டை. கூடப்பொறந்த பொறப்புகளுக்கு தெரிந்திருந்தது "அது பைத்தியக்காரப்பொண்ணு" என்று.
அவர்கள் கைக்குள் அடங்கிகிடக்க வேண்டும், நான் சம்பாதிக்கிற காசெல்லாம், அவர்களை விட்டு போய்விடக்கூடாதென்று இப்படி செய்திருந்தார்கள். நான் உடனடியாக அவளை அறுத்தெறிந்து விட்டு, இன்னொரு கல்யாணம் பண்ணி கொண்டு, "இனி அக்கா தங்கச்சின்னு யாரும் வராதீங்க - என்னை தேடி. உங்களுக்கெல்லாம் இருபது பவுன், முப்பது பவுன்னு போட்டு நல்லாதானே கட்டி கொடுத்தேன். என் வாழ்க்கைய நாசப்படுத்திட்டீங்களே" என்றேன். யாரும் வரவில்லை - அதற்கு பிறகு.
எனக்கு மூத்தமகள் பிறந்த கொஞ்ச நாளில் "அறுத்துவிட்டவளை" நினைத்தேன். காரணம். என் குழந்தையும் மூளைவளர்ச்சி குறைவாக பிறந்திருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளை அறுத்துவிட்டதன் காரணமாக இப்படி குழந்தை பிறந்துவிட்டதா. ஒரு
நாள் அவளை கையோடு கூட்டி வந்து, இங்கேயே வைத்து கொண்டேன். என் பாவத்தை கழுவ வேண்டுமே. மனைவி ஒன்றும் சொல்லவில்லை. அடுத்தடுத்து மூன்று ஆண் குழந்தைகள்.
எந்த பிள்ளைகளை நம்பி எந்த தகப்பனுமில்லை. ஆனால் அவனையும் அறியாமல் மனம் ஓய்வை விரும்புகிற போது - பிள்ளைகள் காப்பாற்ற மாட்டார்களா என்று ஏங்கியபோது, திசைக்கு ஒருவராய் போய்விட்டார்கள்.சரி. "இனி கொஞ்ச நாளைக்கு உழைச்சு தான் திங்கணும்ங்கிறது தான் கடவுளோட எண்ணம் போலும்". உழைக்க தயாராக இருந்தாலும் வேலை வேண்டுமே.
எல்லாமே மாறிவிட்டது. வயசானவர்களை வேலைக்கு சேர்க்க விரும்பிய காலம் மலையேறி போய்விட்டது. "வயசான ஆளுங்க எல்லாம் வேலைக்கு வேணாம்ய்யா" என்கிற காலம் வந்துவிட்டது. அது மட்டுமா... உலகமே மாறிவிட்டது. பெரிய பெரிய கடைகள் வந்து, சிறிய கடைக்காரர்களின் வயிற்றிலடித்தது. இடம் பெயர்வுகள் தமிழ்நாட்டுக்குள் நிகழ்ந்தது போய் - இன்று பெங்காலிகள் வந்தார்கள் - நகை தொழில் போட்டிக்கு. யாரையும் வந்து வேலை பார்க்காதே என்று சொல்ல முடியுமா.
இந்த பத்து வருஷத்தில் பார்க்காத வேலை இல்லை. ஆறுமாசத்துக்கு முன் கொய்யாப்பழம் விற்கிற பெண்மணி, அறுந்த செயினை பற்ற வைக்க வந்தாள். "எங்க ஊரு ஆசாரி செத்து போயிட்டாரு. சின்ன பொருள் பத்த வைக்கணும்னாலும் இவ்வளவு தூரம் வர வேண்டிருக்கு" என்றாள்.
"அப்ப உங்க ஊருல பட்டறை வைச்சா அம்பது நூறு டெய்லி சம்பாதிக்க
முடியுமா சொல்லுங்க. முடியும்னா நானே வைக்கிறேன்" என்றேன்.
"வாங்க நம்ம வீட்டுல ஒரு ரூம் சும்மா தான் கிடக்கு" என்றாள். அவள் மூலம் தான் இந்த கிராமம் அறிந்தது. ரோட்டுக்கு மேலாக வீடு. ஆறுக்கு ஆறு அளவில் ஒரு சிறு அறை. தினசரி இங்கு இருபத்தி ஐந்து, முப்பது ரூபாய் சாப்பாடு செலவாகும்.

நாலு நாளைக்கு ஒரு தடவை ஊருக்கு போகும் போது, கொண்டு போகும் காசு குடும்ப செலவுக்கு சரியாக போகும். கொஞ்ச நாளாய் மூத்த தாரத்துக்கு உடம்புக்கு முடியவில்லை. மருந்து மாத்திரை சரியாக சாப்பிடாமல், உயிரை மாய்த்து கொள்ள நினைக்கிறாள். ஈஸ்வரி தான், இரண்டு பேரையும் வைத்து கொண்டு அல்லாடுகிறாள்.
ஒரு வேளை எனக்கெதாவது ஆகிவிட்டால்... "சீ... முதலில் வாயை கழுவ வேண்டும்." சின்ன வலிக்கெல்லாம் பெரிசாய் பயப்படுவதா. ஆனால் வயசு ஆகி கொண்டே போகிறதே. எழுந்தார். வலி இல்லாதது போல் இருந்தது.
இந்த நிமிஷம் வரை நன்றாக இருப்பதற்கு, "இறைவனுக்கு நன்றி" சொன்னார்.
வம்சி நடத்தும் பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி சிறுகதை

31 கருத்துரைகள்:
சிறுகதைகளாக எழுதி - வாசிப்பாளர்களுக்கு தொந்தரவு தருகிறேனோ. இதுவும்
பரிசு போட்டி சிறுகதை. நன்றி.
என்ன ரமேஷ் இப்படிக் கேட்டுவிட்டீர்கள். மிக அருமையான கதை.. எல்லாரும் நல்லா எழுதுறீங்க.. நீங்க ., ராமலெக்ஷ்மி எல்லாம்..
வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்..
கதை நன்றாக உள்ளது. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.,
அருமையான சிறுகதை
இன்று என் வலையில்
உங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 1
கதை அருமையா இருக்கு, நம்பர் ஒன்னாக வர வாழ்த்துக்கள்...
தொந்தரவா சரிதான் தமிழ்...மூச்சுவிடாமல் வாசிச்சு முடிச்சேன்.வாழ்க்கையோடு ஒட்டி எத்தனை இயல்பான கதை.அந்தத் தாத்தா பாவமாய் பக்கத்தில் இருக்கிறார்.வாழ்த்துகள் !
இயல்பு வாழ்வை ஒட்டிய இன்னொரு சிறப்பான ஆக்கம். எத்தனை கதைகள் படைத்தாலும் வாசிக்கக் காத்திருக்கிறோம். வெற்றிக்கு வாழ்த்துக்கள்!
நண்பரே கதை சூப்பர். முதுமையின் தளர்வு கதையெங்கும் இழையோடுகிறது. வாழ்த்துக்கள்.
தேனம்மை லெக்ஷ்மணன் said...
என்ன ரமேஷ் இப்படிக் கேட்டுவிட்டீர்கள். மிக அருமையான கதை.. எல்லாரும் நல்லா எழுதுறீங்க.. நீங்க ., ராமலெக்ஷ்மி எல்லாம்..
வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்/////
உங்கள் வாக்கு பொன்னாகட்டும் மேடம்.
வேடந்தாங்கல் - கருன் *! said...
கதை நன்றாக உள்ளது. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்////
நன்றி கருன் வருகைக்கு, வாழ்த்துக்கு.
என் ராஜபாட்டை"- ராஜா said...
அருமையான சிறுகதை///
நன்றி ராஜா.
MANO நாஞ்சில் மனோ said...
கதை அருமையா இருக்கு, நம்பர் ஒன்னாக வர வாழ்த்துக்கள்...///
வாழ்த்துக்கு நன்றி மனோ.
ஹேமா said...
தொந்தரவா சரிதான் தமிழ்...மூச்சுவிடாமல் வாசிச்சு முடிச்சேன்.வாழ்க்கையோடு ஒட்டி எத்தனை இயல்பான கதை.அந்தத் தாத்தா பாவமாய் பக்கத்தில் இருக்கிறார்.வாழ்த்துகள் !//////
ஹேமா அவர் உங்களையும் அழவைக்கிறாரா?
ராமலக்ஷ்மி said...
இயல்பு வாழ்வை ஒட்டிய இன்னொரு சிறப்பான ஆக்கம். எத்தனை கதைகள் படைத்தாலும் வாசிக்கக் காத்திருக்கிறோம். வெற்றிக்கு வாழ்த்துக்கள்!!//////
நன்றி ராமலஷ்மி மேடம்.உங்கள் வாழ்த்துக்களே போதும்.
பாலா said...
நண்பரே கதை சூப்பர். முதுமையின் தளர்வு கதையெங்கும் இழையோடுகிறது. வாழ்த்துக்கள்./////
நன்றி பாலா வருகைக்கு, கருத்துக்கு.
கதை நெஞ்சத்தை அழுத்தியது.எளிய அழகான நடை.நன்றி
மிக அருமை தமிழ் உதயம்! ஊன்றிப் படிக்க முடிந்தது..சமீபத்தில் படித்த சிறந்த கதைகளுள் ஒன்று.
//தப்பித்தவறி கூட எந்த ஜோசியரும் நல்ல விதமாய் சொன்னதில்ல.
:)
மிக அருமையான கதை..
வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்..
நல்ல படைப்புகள் என்றுமே அலுப்பைத் தருவதில்லை ரமேஷ். வெற்றி பெற வாழ்த்துகள். என்ன எங்கள் ப்ளாக் பக்கம் வரக் காணோம்?
//ஊருக்கே மீனாட்சி பாட்டியாக இருப்பதால், தனக்கும் மீனாட்சி பாட்டியாகி விட்டாள்//
ரசித்த வரிகள்...
இயல்பான கதை..
வெற்றி பெற வாழ்த்துக்கள்...
KParthasarathi said...
கதை நெஞ்சத்தை அழுத்தியது.எளிய அழகான நடை.நன்றி'./////
நன்றி கே.பார்த்தசாரதி.
அப்பாதுரை said...
மிக அருமை தமிழ் உதயம்! ஊன்றிப் படிக்க முடிந்தது..சமீபத்தில் படித்த சிறந்த கதைகளுள் ஒன்று.
/
நன்றி சார் உங்கள் வாழ்த்துக்கு.
இராஜராஜேஸ்வரி said...
மிக அருமையான கதை..
வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.////
நன்றி மேடம்
ஸ்ரீராம். said...
நல்ல படைப்புகள் என்றுமே அலுப்பைத் தருவதில்லை ரமேஷ். வெற்றி பெற வாழ்த்துகள். என்ன எங்கள் ப்ளாக் பக்கம் வரக் காணோம்.////
நனறி ஸ்ரீராம். வந்து விட்டேன்.
ஸ்வர்ணரேக்கா said...
//ஊருக்கே மீனாட்சி பாட்டியாக இருப்பதால், தனக்கும் மீனாட்சி பாட்டியாகி விட்டாள்//
ரசித்த வரிகள்...
இயல்பான கதை..
வெற்றி பெற வாழ்த்துக்கள்.////
ஸ்வர்ணரேக்கா. தங்களின் முதல் பின்னூட்டம். நன்றி.
“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு அருமையான சிறுகதையைப் படித்த நிறைவு மனதில்! அந்தப் பெரியவரின் மன உணர்வுகளும் மூப்பின் தளர்ச்சிக்கிடையே பயத்துடன் கூடிய கடமையுணர்ச்சியும் மனசை என்னவோ செய்கிறது! அந்தப் புகைப்படம் கூட, ஈர மண்ணும் நனைந்த கூரை வீடுகளும்... மிக அழகு!
போட்டியில் வெற்றி பெற இனிய வாழ்த்துக்கள்!
மனோ சாமிநாதன் said...
ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு அருமையான சிறுகதையைப் படித்த நிறைவு மனதில்! அந்தப் பெரியவரின் மன உணர்வுகளும் மூப்பின் தளர்ச்சிக்கிடையே பயத்துடன் கூடிய கடமையுணர்ச்சியும் மனசை என்னவோ செய்கிறது!
போட்டியில் வெற்றி பெற இனிய வாழ்த்துக்கள்!////
நன்றி மனோ சாமிநாதன் கருத்துக்கு. வாழ்த்துக்கு.
யதார்த்தமான கதை
சொல்லிச் செல்லும் விதத்தில்
முழுமையாக தள்ளாத வ்யதில் இல்லாமையால் நேரும்
துயர் குறித்து மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது
அருமையான கதை
உறுதியாக வெல்லும் வாழ்த்துக்கள்
யதார்த்தனமான நடையில் மிகவும் அருமையாக எழுதி இருகிறீர்கள்! கதையும் மிகவும் அருமை. தனக்கு மூளை வளர்ச்சி குன்றி குழந்தை பிறந்தவுடன், அறுத்துவிட்ட முதல் தாரத்தை அழைத்துக் கொண்டு வந்தது மனதை நெகிழ வைத்து விட்டது. தள்ளாத வயதிலும் உழைத்து வாழும் இந்த தாத்தாவும், மீனாட்சி பாட்டியும் மனதில் நிற்கிறார்கள். ஸ்ரீராம் சொல்லி இருப்பதுபோல் நல்ல படைப்புகள் என்றுமே அலுப்பை தருவதில்லை. மீண்டும் மீண்டும் படித்தேன்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Post a Comment