எனது முந்தைய யுத்தமும்... வாழ்க்கையும்... சிறுகதைக்கு ஹேமா அளித்த பின்னூட்டத்தில் "சிலருக்கு பிறவிக்குணம்" சில குணம் என்று குறிப்பிட்டிருந்தார். நான் பதிலுக்கு, "பிறவிக்குணமாக சிறந்த குணம் இருந்தால் மகிழ்ச்சி. இல்லையேல் சகலருக்கும் கஷ்டம்" என்று குறிப்பிட்டிருந்தேன். அப்படி டைப் செய்து கொண்டிருந்தபோதே, பல வருஷங்களுக்கு முன்னால் - கல்கி வார இதழில் "பிறவிக்குணம்" என்கிற தலைப்பில் வாசித்த ஒரு சிறுகதை ஞாபகத்துக்கு வந்தது.
எழுதியவர் பெயர் ஞாபகமில்லை. ஆனால் கதை என்றுமே மறக்க இயலாத அளவு மனதில் பதிந்துவிட்டது. சில நேரங்களில் சில கதைகள் வாசிக்கும் போது - எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் ஏதோ ஒன்றால் நாம் பாதிப்படையும் போது - இதே மாதிரி ஒரு சிறுகதையை வாசித்தோமே என்று அந்த சிறுகதையை நினைவு கூர்வோம். பிறவிக்குணம் என்பது எப்படிப்பட்டது என்பதை விளக்கும் அற்புதமான சிறுகதை அது.
"கதாநாயகன் பேருந்து நிலையத்தில் ஒருவரை சந்திக்கிறான். அவன் ஏதோ சில உதவி கோருகிறான். நாயகனும் மனிதாபிமானத்தில் சில உதவிகள் செய்கிறார். இவரது முகவரியை வாங்கி வைத்து கொண்டு "உதவிகளை திருப்பி செய்வதாக சொல்லி கொண்டு" விடைபெறுகிறான். சில வாரங்களில் நாயகனுக்கு - உதவி பெற்றவனால் சிற்சில தொல்லைகள் உருவாகிறது. அவன் ஒரு தீவிரவாதி. அவனை போலீஸ் கைது செய்கிறது. இவரது பெயர் முகவரியை - அவன் தனது டைரியில் எழுதி வைத்திருந்தமையால் - போலீஸ், அவனது கூட்டாளியாக இவரை கருதி கைது செய்து சிறையில் வைக்கிறது. மிக பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.
சில வாரங்களில் - இவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்படுகிறார். எல்லாவித சிக்கல்களிலும் இருந்து மீண்டு, மீண்டும் பணிக்கு செல்ல துவங்குகிறார். ஒரு நாள் - அதே பேருந்து நிலையத்தில் - முன்பு போலவே ஒருவர் உதவி கோர, இவர் யாரோ ஒருவருக்கு உதவி செய்ய போய் - சிறைக்கு சென்றதை, மிக பெரிய மன உளைச்சலுக்கு ஆளானதை எல்லாம் மறந்து மீண்டும் உதவி செய்ய போகிறார். கதை முடிகிறது. உதவுவது என்பது அவரது பிறவிக்குணம். அதனால் எத்தனை பாதிப்பு வந்தாலும் - உதவும் குணத்தை, அவர் மாற்றிக் கொள்ளவே மாட்டார் என்கிற உண்மையை கதை வெளிப்படுத்தும்."ஒருவரின் பிறவிக்குணமாக சிறந்த குணம் இருந்தால் எல்லோருக்குமே மகிழ்ச்சி. அதுவே மோசமான குணமாக இருந்தால் சகலருக்கும் கஷ்டம், சங்கடம்" இந்த மோசமான குணத்தை பிறவிக்குணம் என்பதற்காக கண்டு கொள்ளாமல் விட்டு விட முடியுமா? அதை திருத்த முடியாதா? "பிடிவாதம், அலட்சியம், சகிப்புத்தன்மை இன்மை, அதீத கோபம், பொய் பேசுவது" போன்றவை எல்லாம் - உறவுகளையும், நட்பு வட்டத்தையும் பாடாய் படுத்தக்கூடியவை.
நாம் செல்லும் வழி நெடுக - இம்மாதிரி நிறைய மனிதர்களை பார்க்கிறோம். நாம் அவர்களை போல் இல்லாத பட்சத்தில் - அவர்களால் நிறைய கஷ்டப்படுவோம். அந்த குணம் இருவருக்கும் இருந்தால் "அடித்து கொண்டாவது நட்பு பாராட்டுவார்கள்." நான் பார்த்தவரை - இந்த குணம் பெற்றவர்களின் செயல்பாடுகளை பார்த்து பார்த்து தான் - பிள்ளைகளுக்கும் அவை தொற்றுகிறது. கூர்ந்து கவனித்தால் - இம்மாதிரியான குணம் படைத்தவர்களின் தாய் தந்தையர் யாரேனும் ஒருவரிடம் இந்த குணம் இருக்கவே செய்யும்.
குறைந்தபட்சம் குழந்தைகள் முன் மட்டுமாவது - பெற்றோர்கள் யோக்கியமாக இருப்பது போல் நடிப்பது நல்லது. "என்ன சமையல் பண்ணி இருக்கே" என்று தந்தை தட்டை தட்டி விடுவதை ஒரு குழந்தை பார்க்க நேர்ந்தால் - உதாசினப்படுத்துவது தவறில்லை போலும் என்று குழந்தைக்கு எண்ணத் தோன்றும். யுத்தமும், வாழ்க்கையும் - கதை எங்கேயும் நடக்கின்ற ஒன்று தான். நாம் செய்கின்ற செய்கையால், நாம் பேசுகின்ற பேச்சால் - எத்தனை அனர்த்தங்கள் ஏற்படுகிறது என்பதை உணர்தல் வேண்டும்.

அதற்கு குழந்தைகளாக இருக்கும்போதே உணர செய்தல் வேண்டும். குழந்தைகளின் முதல் சில வருஷங்களுக்குள்ளாகவே - மொத்த வாழ்க்கைக்கும் தேவையான குணாதிசயங்கள் கற்று தரப்பட்டுவிடுகிறது. அந்த சில வருஷங்களில் குழந்தைகள் எதை கற்று கொள்கிறது என்பது தான் முக்கியம். அதுவே மொத்த வாழ்க்கையாகிறது. மொத்த வாழ்க்கையின் இன்ப, துன்பத்திற்கும் காரணமாகிறது.


30 கருத்துரைகள்:
மிகச் சரியாகச் சொன்னீர்கள்! பகிர்வுக்கு நன்றி!
பிறவி குணம் கதை மனதை தொட்டது.
நீங்கள் சொல்லியிருப்பது யாவும் உண்மை.குறைந்தது. பாதி அளவாவது குழந்தைகள் சிறு பிராயத்தில் தாய் தந்தையரிடமிருந்து கற்று கொள்கிறது
குறைந்தபட்சம் குழந்தைகள் முன் மட்டுமாவது - பெற்றோர்கள் யோக்கியமாக இருப்பது போல் நடிப்பது நல்லது. "என்ன சமையல் பண்ணி இருக்கே" என்று தந்தை தட்டை தட்டி விடுவதை ஒரு குழந்தை பார்க்க நேர்ந்தால் - உதாசினப்படுத்துவது தவறில்லை போலும் என்று குழந்தைக்கு எண்ணத் தோன்றும்.//
சரியாக சொன்னீர்கள், நாம் செய்வதைத்தான் குழந்தைகள் திருப்பி செய்கிறது....!!! கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது...
அருமையான பதிவு
குழந்தைகள் நாம் சொல்வதைவிட
நாம் செய்வதைத்தான் செய்வார்கள் என்பதை
பெரியவர்கள் அறிவது நல்லது
நல்ல பயனுள்ள பதிவைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 2
//"ஒருவரின் பிறவிக்குணமாக சிறந்த குணம் இருந்தால் எல்லோருக்குமே மகிழ்ச்சி. அதுவே மோசமான குணமாக இருந்தால் சகலருக்கும் கஷ்டம், சங்கடம்" இந்த மோசமான குணத்தை பிறவிக்குணம் என்பதற்காக கண்டு கொள்ளாமல் விட்டு விட முடியுமா? அதை திருத்த முடியாதா?//
நல்ல ஆய்வு. கேள்விகளை எழுப்பி நல்ல தீர்வையும் காட்டியுள்ளீர்கள்.
பிறவிக்குணம் எப்போது மாற்றிக் கொள்ள முடியாது. உண்மைதான்
//குறைந்தபட்சம் குழந்தைகள் முன் மட்டுமாவது - பெற்றோர்கள் யோக்கியமாக இருப்பது போல் நடிப்பது நல்லது. "என்ன சமையல் பண்ணி இருக்கே" என்று தந்தை தட்டை தட்டி விடுவதை ஒரு குழந்தை பார்க்க நேர்ந்தால் - உதாசினப்படுத்துவது தவறில்லை போலும் என்று குழந்தைக்கு எண்ணத் தோன்றும்//
நிதர்சன உண்மை..
உண்மைதான் .. அது மாறாத விஷயம்
இன்று என் வலையில் ..
தொண்டர்களா ? குண்டர்களா ? பா. ம .க வில் குழப்பம்
கதை மிகவும் அருமையாக இருந்தது. நல்ல பதிவு!
குழந்தைகள் வளர்ப்பு பெற்றவர்கள் கையில் என்பது முற்றிலுமாக சரியில்லை. ஒரு தாய் தன் குழந்தைகளை ஒரே மாதிரிதான் வளர்கிறாள். ஆனால் அந்த குழந்தைகள் ஒரே குணம் கொண்டா வளர்கிறது! நல்லது எது தீயது என்று நமக்கு தெரிந்த வரையில் சொல்லத்தான் முடியும். அதை எடுத்துக் கொள்ளும் குணம் இருந்தால்தான் அந்த பிள்ளை எடுத்துக் கொள்ளும். குழந்தைகளாக இருக்கும் வரையில் பெற்றவர்களுக்கு பயந்து அவர்கள் சொல்வதை கேட்கும் குழந்தைகள் கூட, பெரியவர்கள் ஆனா பின் அவர்களின் இயல்பான குணத்தை வெளிக்காட்ட தொடங்கி விடுகிறார்கள். பிறவி
குணத்தை ஒருநாளும் மாற்ற முடியாது. தன் குணம் தவறென்று தானே உணர்ந்து, அதை மாற்றிக் கொள்ள முயற்சி செய்தாலும், ஒரு சிலருக்குதான் அதை மாற்றிக் கொள்ள முடிகிறது.
நல்ல அலசல். மீனாட்சியின் வார்த்தைகள் உண்மை. நாம் சொல்வதை எடுத்துக் கொல்லும் குணம் இருந்தால்தான் குழந்தைகள் எடுத்துக் கொள்கின்றன. அவர்கள் மாறி/மாற்றிக் கொள்ள சில சமயம் ஒரு பெரிய அனுபவம் தேவைப்படும்.
ஒரு பின்னூட்டம் தரமான ஒரு சிறுகதையையே ஞாபகப் படுத்தியிருக்கிறது.பிறவிக் குணத்தை என்னதான் மாற்ற முனைந்தாலும் அடிப்படையில் ஒட்டிக்கொண்டேதானிருக்கும்.மாற்றமுடியாது தமிழ்.அனுபவ உண்மையும்கூட !
உண்மையில் நீங்கள் குறிப்பிட்டது போல் அது அருமையான கதை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.....
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிறவிக்குணம் இருக்கு என்பதை அழகாக சொல்லும் கதை..ஜெயிலுக்கு போய் வந்த பின்னும் அவர் அதே போன்ற உதவியை செய்வது அவரின் உயர்ந்த பிறவிக்குணத்தை காட்டுது..
Arumai.
middleclassmadhavi said...
மிகச் சரியாகச் சொன்னீர்கள்! பகிர்வுக்கு நன்றி!,.////
நன்றி மாதவிவருகைக்கு.
KParthasarathi said...
பிறவி குணம் கதை மனதை தொட்டது.
நீங்கள் சொல்லியிருப்பது யாவும் உண்மை.குறைந்தது. பாதி அளவாவது குழந்தைகள் சிறு பிராயத்தில் தாய் தந்தையரிடமிருந்து கற்று கொள்கிறது////
உண்மை தானே K.P சார்.
MANO நாஞ்சில் மனோ said...
சரியாக சொன்னீர்கள், நாம் செய்வதைத்தான் குழந்தைகள் திருப்பி செய்கிறது....!!! கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.///
. நன்றி மனோ கருத்துரைக்கு.
Ramani said...
அருமையான பதிவு
குழந்தைகள் நாம் சொல்வதைவிட
நாம் செய்வதைத்தான் செய்வார்கள் என்பதை
பெரியவர்கள் அறிவது நல்லது.///
முத்தாய்ப்பாக அழகாக சொல்லி விட்டீர்கள் ரமணி சார்.
ராமலக்ஷ்மி said...
நல்ல ஆய்வு. கேள்விகளை எழுப்பி நல்ல தீர்வையும் காட்டியுள்ளீர்கள்.//////
நன்றி ராமலக்ஷ்மி மேடம்.
சாகம்பரி said...
பிறவிக்குணம் எப்போது மாற்றிக் கொள்ள முடியாது. உண்மைதான்//////
நன்றி சாகம்பரி கருத்துக்கு.
* வேடந்தாங்கல் - கருன் *! said...
//குறைந்தபட்சம் குழந்தைகள் முன் மட்டுமாவது - பெற்றோர்கள் யோக்கியமாக இருப்பது போல் நடிப்பது நல்லது. "என்ன சமையல் பண்ணி இருக்கே" என்று தந்தை தட்டை தட்டி விடுவதை ஒரு குழந்தை பார்க்க நேர்ந்தால் - உதாசினப்படுத்துவது தவறில்லை போலும் என்று குழந்தைக்கு எண்ணத் தோன்றும்//
நிதர்சன உண்மை..//////
நன்றி கருன் வருகைக்கு..
என் ராஜபாட்டை"- ராஜா said...
உண்மைதான் .. அது மாறாத விஷயம்//////
நன்றி ராஜா
மீனாக்ஷி said...
குணத்தை ஒருநாளும் மாற்ற முடியாது. தன் குணம் தவறென்று தானே உணர்ந்து, அதை மாற்றிக் கொள்ள முயற்சி செய்தாலும், ஒரு சிலருக்குதான் அதை மாற்றிக் கொள்ள முடிகிறது./////
நீங்கள் சொல்வதையும் ஏற்று கொள்ளலாம் மீனாட்சி.
ஸ்ரீராம். said...
நல்ல அலசல். மீனாட்சியின் வார்த்தைகள் உண்மை. நாம் சொல்வதை எடுத்துக் கொல்லும் குணம் இருந்தால்தான் குழந்தைகள் எடுத்துக் கொள்கின்றன. அவர்கள் மாறி/மாற்றிக் கொள்ள சில சமயம் ஒரு பெரிய அனுபவம் தேவைப்படும்./////
நன்றி ஸ்ரீராம்.
ஹேமா said...
ஒரு பின்னூட்டம் தரமான ஒரு சிறுகதையையே ஞாபகப் படுத்தியிருக்கிறது.பிறவிக் குணத்தை என்னதான் மாற்ற முனைந்தாலும் அடிப்படையில் ஒட்டிக்கொண்டேதானிருக்கும்.மாற்றமுடியாது தமிழ்.அனுபவ உண்மையும்கூட/////
உண்மை தான் ஹேமா
துஷ்யந்தன் said...
உண்மையில் நீங்கள் குறிப்பிட்டது போல் அது அருமையான கதை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.....
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிறவிக்குணம் இருக்கு என்பதை அழகாக சொல்லும் கதை.. /////
மகிழ்ச்சி துஷ்யந்தன் வருகைக்கு.
துரைடேனியல் said...
Arumai.. /////
நன்றி துரை டேனியல் தங்கள் முதல் வருகை.
பிறவிக்குணம் மாறாது என்ற பார்வையில் பிள்ளைகள் முன்னால் மட்டும் பிறவிக்குணம் மாறி நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தோல்வியையே தரும் என்று நினைக்கிறேன். பிறவிக்குணம் என்று எதுவும் இல்லை என்றும் நினைக்கிறேன். ஒருவேளை அதைத்தான் சொல்கிறீர்களோ?
மறந்துவிட்டேனே... உள்ளடங்கிய சிறுகதை மனதை என்னவோ செய்தது.
அப்பாதுரை சார்,
மிக்க நன்றி. அந்த சிறுகதை நிறைய பேரை பாதித்துள்ளது. அந்த கதையை படித்து நிறைய ஆண்டுகள் ஆனதால் - அந்த கதையை உயிரோட்டகமாக கூட சொல்லவில்லை. ஞாபகத்திலுள்ள அளவு தான் சொல்லி இருந்தேன். மேலும் பிறவிக்குணம் என்ற ஒன்று இருப்பதாகவே கருதுகிறேன். நன்றி.
Post a Comment