எப்படி இருந்தோம்... எப்படி இருக்க போகிறோம்... (2011 to 2012)

Friday, December 30, 2011

நேற்றை திரும்பி பார்ப்பதில் எப்போதும் ஒரு அலாதி மகிழ்ச்சி இருக்கவே செய்கிறது. கடந்த 2011ஐ "துயரம், மகிழ்ச்சி, வெற்றி, தோல்வி, பயம், சங்கடம், பிரச்சனை" எனபனவாக தான் அனைவரும் கடந்து வந்திருப்போம். "2011 சரியில்லை" என்று சிலரும், "2011 அற்புதமாக இருந்தது" என்று சிலரும் சொல்லக்கூடும். இப்படி ஐம்பது சதவிதம், அப்படி ஐம்பது சதவிதம் இருக்கலாம்.

"2011 நன்றாக இருந்தது" என்பவர்கள் நம்பிக்கையோடு, "2012 ஐ" எதிர்நோக்குவார்கள். "2011 சரியில்லை" என்றவர்கள் - புத்தாண்டு பலன் எப்படி இருக்கக்கூடும் என்று ஜோதிடம் பார்க்கக்கூடும் அல்லது "2011"ல் நாம் என்ன தவறு செய்தோம், ஏன் சரி இல்லாமல் போனது என்று சுயபரிசோதனை செய்யக்கூடும். எப்படி இருந்தாலும் "2012" வரத்தான் போகிறது - வரவேற்க விரும்பாவிட்டாலும் கூட.



குறிப்பிட்ட வயதுவரையோ அல்லது பொருளாதார பயம் இல்லாதிருந்தாலோ தான் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியும். வருடா வருடம் தவறாமல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் நண்பர், இந்த வருஷம் "எங்கேயும் போகல. ஒரு நைட் பண்ற செலவு - ஒரு வார குடும்ப செலவுக்கு போதுமானது" என்றார். உண்மை தான். பக்குவப்பட்ட மனது பாடம் சொல்கிறது. சென்ற வருஷம் - இதையே அவருக்கு எவரேனும் எடுத்து சொல்லி இருந்தாலும் கூட காதில் போட்டு கொண்டிருக்க மாட்டார். அனுபவம், பணத்தின் அருமை, வாழ்க்கை தரும் வலி என்று இந்த வருஷம் இந்த விஷயத்தை அவர் கற்று கொண்டிருக்கிறார்.

ஆனால் அதே போல குடும்ப பாரம் இருக்கிற நிறைய பேர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பணத்தை விரையம் செய்யவே போகிறார்கள். புத்தாண்டுக்கு முந்தைய இரவு - கடந்த வருடத்தையும், கடக்க போகும் வருடத்தையும் அலசி ஆராய ஒரு அருமையான இடம் என்றே சொல்ல வேண்டும். "எப்படி இருந்தோம்... எப்படி இருக்க போகிறோம்..." என்கிற பார்வை அச்சமின்றி - அடுத்த அடியை எடுத்து வைக்க உதவும்.

ஒருவருக்கு சிறப்பாக இருந்த ஆண்டு, ஏன் இன்னொருவருக்கு மோசமாக உள்ளது என்கிற கேள்வி நியாயமானதே. ஓரளவுக்கு, இரண்டே இரண்டை வைத்து தான் - நாம் நம் வாழ்க்கை "எப்படி இருந்தது" என்பதை தீர்மானித்து சொல்(கொள்)கிறோம். பண வரவு மற்றும் குடும்ப நிம்மதியே அவை. பெரும்பாலும் பிஸ்னஸ் மேன்களுக்கு தான் - தொழிலின் ஏற்ற இறக்கம் என்பது பயத்தையோ, மகிழ்ச்சியையோ மாறி மாறி தரும். அப்படி பார்க்கும்போது - தொழில் சிறப்பான நிலையை அமைய பெற்றவர்கள், "2011 நன்றாக இருந்தாக சொல்லக்கூடும்".

தொழில் அமைய பெறாதவர்கள் "2011 மோசம்" என்று சொல்லலாம். சரி, எனக்கு எப்படி இருந்தது என்பதை சொல்லியாக வேண்டுமே. முதல் பத்தியில் சொன்னது போல எல்லாவற்றையும் கடக்க வேண்டியதாயிற்று. சுயதொழில்... முந்தைய பல வருஷங்களோடு ஒப்பிடும்போது "2011" திருப்திகரமானதாக இல்லை தான். மற்றப்படி சில நல்ல விஷயங்களும் நடந்துள்ளது.

பொதுவாக, திருப்திகரமானவாழ்க்கை இல்லாமல் போவதில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நமது அஜாக்கிரதை. மற்றது சூழல். முன்னதை நாம் சரி செய்து விடலாம். இரண்டாமதை. இன்றைக்கு நமது வாழ்க்கையை யாரோ ஒருவர் தான் தீர்மானிக்கிறார்கள். ஒவ்வொரு சுயதொழில் பார்ப்பவருக்கும் - அரசு ஏதாவது ஒரு வகையில் நெருக்கடி கொடுப்பதாகவே உள்ளது. இன்றைக்கு சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு என்பது எத்தனை பேரின் வாழ்வதாரங்களை அழிக்க போகிறதோ. இந்தியாவில் உள்ள கோடானுகோடி மக்களுக்கு நேர்ந்த, நேர விருக்கிற பாதிப்பு எனக்கு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது.

சரி. "என்ன தான் ஆகப்போகிறது" என்கிற ஆர்வத்தோடு - கொஞ்சம் அச்சத்தோடு தான் 2012ஐ பார்க்கவேண்டும் போலும். அதே நேரம் நம் அஜாக்கிரதையினால் ஏற்படும் பின்னடைவுக்கு - பொய்யான காரணங்களை தேடக்கூடாது. தேடினால் மீள்வது கடினம். பல நேரங்களில் நெருக்கடி என்பது நம்மை கடுமையாக உழைக்கவும் வைக்கும். ஒரு வேளை நெருக்கடி வராமல் இருந்தால் - நம்மிடம் போர்க்குணமும் இல்லாது போகும்.

"விழுவது எழவே" என்பதை உணருதல் நலம் பயக்கும். பல்வேறு தொலைக்காட்சிகளில் துறை சார்ந்து "2011"ஐ அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கையுடன் 2012ஐ வரவேற்போம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

29 கருத்துரைகள்:

மனோ சாமிநாதன் said...

அருமையான சிந்தனைகளுடன் கூடிய பகிர்வு! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

ஸ்ரீராம். said...

புத்தாண்டு வாழ்த்துகள். நல்லதொரு அலசலைக் கொடுத்திருக்கிறீர்கள். நல்லதோ கெட்டதோ நான் கடந்து வந்த நாட்களை திரும்பி பார்ப்பதில்லை, திருத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதில்லை! நாளை பற்றிக் கவலையும் இல்லை. 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...'! :)
அது சரி, 2012 -இல் உலகம் அழியப் போகுதாமே....!! :))))))

ஹேமா said...

தமிழ்...இனிய மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.ஸ்ரீராமின் பயத்தைப் பாருங்களேன்.நிச்சயம் நான் எப்போதும் பழையவைகளை மீட்பதுண்டு.அப்போதான் என்னைச் சரியாக்கிக்கொள்ள முடிகிறது.ஆனால் என்ன....சிலவற்றை மறந்தால் சுகம் !

அப்பாதுரை said...

மகிழ்ச்சியளிப்பது வெற்றியல்ல, போராட்டமே என்று சொல்லியிருக்கிறீர்களே? கட்டுரையும் அந்தச் சுவட்டில்.
நம்பிக்கையுடன் வரவேற்போம்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

அழகாக யதார்த்தமான சிந்தனை நன்றி....உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்கா...!

தமிழ் உதயம் said...

மனோ சாமிநாதன் said...

அருமையான சிந்தனைகளுடன் கூடிய பகிர்வு! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!//////

நன்றி மனோ மேடம்.

தமிழ் உதயம் said...

ஸ்ரீராம். said...

புத்தாண்டு வாழ்த்துகள். நல்லதொரு அலசலைக் கொடுத்திருக்கிறீர்கள். நாளை பற்றிக் கவலையும் இல்லை. 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...'!//////

எனக்கும் அந்த மனோபாவம் இருந்தாலும் - திரும்பி பார்ப்பதில் ஒரு சந்தோஷம் உள்ளது.

தமிழ் உதயம் said...

ஹேமா said...

தமிழ்...இனிய மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.ஸ்ரீராமின் பயத்தைப் பாருங்களேன்.//////

தோன்றியவை எல்லாம் மறைவது தான் நியதி ஹேமா.

தமிழ் உதயம் said...

அப்பாதுரை said...

மகிழ்ச்சியளிப்பது வெற்றியல்ல, போராட்டமே என்று சொல்லியிருக்கிறீர்களே? கட்டுரையும் அந்தச் சுவட்டில்.
நம்பிக்கையுடன் வரவேற்போம்..//////

. நம்பிக்கை தானே வாழ்க்கை அப்பாதுரை சார்.

தமிழ் உதயம் said...

MANO நாஞ்சில் மனோ said...

அழகாக யதார்த்தமான சிந்தனை நன்றி....உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்கா...//////

நன்றி மனோ. மகிழ்ச்சி மனோ.

Ramani said...

தங்கள் மன நிலையை சொல்வது போல் சொல்லிச் சென்றாலும்
பெரும்பாலோரின் மன நிலையும் இதுவே
மனம் கவர்ந்த அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்

Rathi said...

தமிழ் உதயம், இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

ராமலக்ஷ்மி said...

நல்ல அலசல். திரும்பிப் பார்ப்பதும் அவசியம். திருத்திக் கொள்ள உதவும். அதே நேரம்,
/ நம்பிக்கையுடன் 2012ஐ வரவேற்போம்./

ஆம், இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!

தமிழரசி said...

தமிழ் எப்படி உங்களால் மட்டும் தேர்ந்தெடுத்ததாய் தரமாய் தரமுடிகிறது ஒவ்வொரு பதிவையும் இனிமேல் உங்களை பாராட்ட போவதில்லை போங்க...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழ்

வே.சுப்ரமணியன். said...

இந்த இடுகை, புது வருடத்தை எதிர்நோக்க மட்டுமல்லாது, நமது வாழ்க்கையின் ஒவ்வொரு செயலையும் செய்ய துவங்கும்போதும் செய்யப்படவேண்டுவனவற்றை அழகாக தாங்கி நிற்க்கிறது. மனம் திறந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மாலதி said...

சிறந்த நினைவு பதிவு பாராட்டுகள்...

இரவு வானம் said...

நன்றாக எழுதியுள்ளீர்கள் தமிழ் உதயம், வரும் ஆண்டு உங்களுக்கு நல்ல ஆண்டாக அமையும்,

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

மீனாக்ஷி said...

நல்ல பதிவு!
நல்லதோ, கெட்டதோ சென்றது சென்றதுதான். இனி நடப்பது மனம் போல இருக்க வேண்டும். முயற்சிதான் நம் கைகளில். முடிவு காலத்தின் கைகளில்தான்.
உங்களுக்கு என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

ஜோதிஜி திருப்பூர் said...

வளமும் நலமும் பெற 2012 வருட புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

தமிழ் உதயம் said...

Ramani said...
மனம் கவர்ந்த அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்//////

நன்றி ரமணி சார்.

தமிழ் உதயம் said...

Rathi said...

தமிழ் உதயம், இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் :)//////

மகிழ்ச்சி ரதி.தங்களுக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் said...

ராமலக்ஷ்மி said...

நல்ல அலசல். திரும்பிப் பார்ப்பதும் அவசியம். திருத்திக் கொள்ள உதவும். அதே நேரம்,
/ நம்பிக்கையுடன் 2012ஐ வரவேற்போம்./)//////


உண்மை தான். திரும்பி பார்ப்பதே திருத்தி கொள்ள தானே. ராமலகஷ்மி மேடம்.

தமிழ் உதயம் said...

தமிழரசி said...

தமிழ் எப்படி உங்களால் மட்டும் தேர்ந்தெடுத்ததாய் தரமாய் தரமுடிகிறது ஒவ்வொரு பதிவையும் இனிமேல் உங்களை பாராட்ட போவதில்லை போங்க..//////

எப்போதாவது வருகறிர்கள் தமிழரசி கருத்துரைக்காவிட்டால் எப்படி.

தமிழ் உதயம் said...

வே.சுப்ரமணியன். said...

இந்த இடுகை, புது வருடத்தை எதிர்நோக்க மட்டுமல்லாது, நமது வாழ்க்கையின் ஒவ்வொரு செயலையும் செய்ய துவங்கும்போதும் செய்யப்படவேண்டுவனவற்றை அழகாக தாங்கி நிற்க்கிறது.//////

நன்றி சுப்பிரமணியன்.

தமிழ் உதயம் said...

மாலதி said...

சிறந்த நினைவு பதிவு பாராட்டுகள்....//////

நன்றி மாலதி பாராட்டுகளுக்கு.

தமிழ் உதயம் said...

இரவு வானம் said...

நன்றாக எழுதியுள்ளீர்கள் தமிழ் உதயம், வரும் ஆண்டு உங்களுக்கு நல்ல ஆண்டாக அமையும்,.//////

நன்றி, மகிழ்ச்சி இரவுவானம்.

தமிழ் உதயம் said...

மீனாக்ஷி said...

நல்ல பதிவு!
நல்லதோ, கெட்டதோ சென்றது சென்றதுதான். இனி நடப்பது மனம் போல இருக்க வேண்டும். முயற்சிதான் நம் கைகளில். முடிவு காலத்தின் கைகளில்தான். //////

அருமை மீனாட்சி. தங்களுக்குபுத்தாண்டு நல்வாழ்த்துகள்.

தமிழ் உதயம் said...

ஜோதிஜி திருப்பூர் said...

வளமும் நலமும் பெற 2012 வருட புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. //////

நன்றி ஜோதிஜி.

விமலன் said...

நம்பிக்கைகளே வாழ்வாதரத்தின் ஆணி வேராக/
2012 நல்லதாகவே மலரும்.இதில் ஜோசியம் என்ன?மற்ற விஷயங்கள் என்ன?
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்குமாய்/

Related Posts Plugin for WordPress, Blogger...