எங்கே, எப்போது ஆர்தர் ஆசே குறித்து வாசித்தேன் என்று ஞாபகமில்லை. இணையத்தில் எடுத்தது தான். எழுதுவதற்கென்று அவரை பற்றிய சில குறிப்புகளை எடுத்து வைத்திருந்தேன். ஆனால் எழுதாமல் விட்டு விட்டேன். ஒரு மனிதன் எம்மாதிரியான மனநிலையோடு இருக்க வேண்டும் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் - மறைந்த முன்னாள் டென்னிஸ் வீரர் ஆர்தர் ஆசே... அறுவை சிகிச்சை ஒன்றில் தவறான ரத்த பரிமாற்றத்தினால் எய்ட்ஸ் நோய்க்கு ஆளான டென்னிஸ் வீரர் ஆர்தர் ஆசேக்கு ஒரு ரசிகர் அனுப்பிய கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது..
"கடவுள் ஏன் உங்களை தெரிவு செய்தான் இவ்வாறானதொரு துன்பத்துக்கு" என்று. அதற்கு ஆர்தர் ஆசே, "உலகெங்கிலும் 50 மில்லியன் சிறுவர்கள் டென்னிஸ் விளையாட ஆரம்பிக்கிறார்கள். அவர்களில் 50 மில்லியன் பேர் டென்னிஸ் விளையாட கற்றுக்கொள்கிறார்கள். அவர்களில் 5 இலட்சம் பேர் டென்னிசை professional ஆக கற்றுக்கொள்கிறார்கள் அவர்களில் 50,000 பேர் விளையாட்டில் தேர்வு பெறுகிறார்கள் அவர்களில் 5000 பேர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்குபெறும் தகுதியை பெறுகிறார்கள்.
அவர்களில் 50 பேர் விம்பிள்டன் போட்டிகளில் பங்குபெறுகிறார்கள்.
அவர்களில் 4 பேர் அரையிறுதிப்போட்டிக்கும் 2 பேர் இறுதிப்போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டு இறுதியில் நான் சாம்பியன் ஆகிறேன். அப்போது நான் ஒரு போதும் கடவுளிடம் கேட்டதில்லை ஏன் என்னை தெரிவு செய்தாய் என்று. இன்று ஒரு துன்பத்தால் பாதிக்கப்படும் போது மட்டும் என்னால் எப்படி கேட்க முடியும் என்னை ஏன் இதற்கு தெரிவு செய்தாய்" என்று பதில் எழுதியிருந்தாராம்..
எத்தனை நேர்மையான பதில். வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, அமைதியின்மை என்று சகலத்தையும் ஒரே மாதிரியாக அணுக முடிபவர்களால் தான் இத்தகைய பதிலை தரமுடியும். வாழ்க்கையில் அனேகம் பேருக்கு இன்பமும், துன்பமும் மாறி மாறி தான் வருகிறது. ஆனால் ஆர்தர் ஆசே போன்று மனதை பக்குவப்படுத்தி கொள்ள முடிகிறதா?நான் எனது ஒரு சிறுகதையில், (நேற்றுக்கும், நாளைக்கும் இடையே... ) தன் வாழ்வில் மிகப்பெரிய இழப்பொன்றை சந்திக்கும் நாயகனின் மனநிலையை பற்றி இப்படி வெளிப்படுத்தி இருந்தேன். "மிகப்பெரிய அறிவாளிகளாய் சொற்பமான பேரே இருக்கிறார்கள். மிகப்பெரிய பயங்கர வாதிகளாய் சொற்பமான பேரே இருக்கிறார்கள். மிகப் பெரிய மனச் சிதைவுக்கும், மிகப் பெரிய கேவலத்திற்கும் ஆளாகி கின்றவர்களாய் சொற்பமான பேரே இருக்கிறார்கள். அந்த சொற்பமான பேரில் நான் ஒருவனாய்... மிகப் பெரிய மனச்சிதைவுக்கும், மிகப் பெரிய அவமானத்திற்கும் ஆளானவனாய்".. என்று எழுதி இருந்தேன்.
வெற்றி கிடைக்கும் போது - எப்போதும் அந்த வெற்றிக்கு நாம் தகுதி உடையவர்களாகவே நினைக்கிறோம். ஆனால் கஷ்டம் அல்லது தோல்வி என்ற ஒன்று வரும்போது மட்டும், பிறரோடு நம்மை சம்பந்தப்படுத்தி பார்க்கிறோம். தனக்கெல்லாம் இந்த கஷ்டமே வந்திருக்கக்கூடாது என்கிற மனநிலையில் "அவனெல்லாம் நன்றாக இருக்கிறான். நமக்கு தான் கஷ்டம் ஒன்று மாற்றி ஒன்று வருகிறது" என்று நினைக்கிறோம்.
சரியாக சொல்வதானால் - உலகில் மகிழ்ச்சியாக இருப்பவர்களை விட துயரத்தில், ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்கள் தான் அதிகம். ஆனால் நாம் அதை உணர்வதே இல்லை. கஷ்டங்களில், துயரங்களில் இரண்டு வகை உள்ளது. ஒன்று - மீள முடிகின்ற கஷ்டங்கள். மற்றது மீள முடியாதது. ஆர்தர் ஆசே மீள முடியாத துயரம். அதற்கே அவர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்ட போது, மீள முடிகிற துயரங்களில் இருப்பவர்கள் - தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்ள முடியாதா? என்று என் நண்பருக்கு மட்டுமல்ல - அவ்வப்போது எனக்கும் நான் சொல்லி கொள்வேன்.

கணினி பழுதடைந்திருந்தமையால் - ஒரு சின்ன இடைவெளி விழுந்து விட்டது.

22 கருத்துரைகள்:
வெற்றி கிடைக்கும் போது - எப்போதும் அந்த வெற்றிக்கு நாம் தகுதி உடையவர்களாகவே நினைக்கிறோம். ஆனால் கஷ்டம் அல்லது தோல்வி என்ற ஒன்று வரும்போது மட்டும், பிறரோடு நம்மை சம்பந்தப்படுத்தி பார்க்கிறோம்.
//எனக்கும் நான் சொல்லி கொள்வேன்.//
எங்களுக்கும் சொல்லி தன்னம்பிக்கை தந்துள்ளீர்கள். பிரச்சனை இல்லாதவரே இல்லை. மீண்டு வரும் முயற்சிகளில் நகர்வதே வாழ்க்கை.
நல்ல பதிவு.
அருமையான பதிவு ,,, நன்றி
உங்கள் பார்வைக்கு இன்று
அண்ணே.. வெட்கம், மானம், கிலோ என்ன விலை?
ஆர்தர் ஆசே மீள முடியாத துயரம். அதற்கே அவர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்ட போது, மீள முடிகிற துயரங்களில் இருப்பவர்கள் - தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்ள முடியாதா? என்று என் நண்பருக்கு மட்டுமல்ல - அவ்வப்போது எனக்கும் நான் சொல்லி கொள்வேன்.//
சூப்பரா சொல்லிட்டீங்க மக்கா நன்றி...!
//என் நண்பருக்கு மட்டுமல்ல - அவ்வப்போது எனக்கும் நான் சொல்லி கொள்வேன்//
எங்களுக்கும்!! மிக்க நன்றி.
;;;வெற்றி கிடைக்கும் போது - எப்போதும் அந்த வெற்றிக்கு நாம் தகுதி உடையவர்களாகவே நினைக்கிறோம். ஆனால் கஷ்டம் அல்லது தோல்வி என்ற ஒன்று வரும்போது மட்டும், பிறரோடு நம்மை சம்பந்தப்படுத்தி பார்க்கிறோம்.''
நிதர்சனமான
நிச்சயமான
நீக்கமற எங்கும்
நிறைந்திருக்கும் உண்மை இது
அழகான பகிர்வு
தமிழ்...சுகம்தானே.காணோம்ன்னு தேடினேன் !
பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றிகொள்வதே வாழ்வின் சுவாரஸ்யம்.எனக்கு மிகவும் பிடிக்கும்.பிரச்சனையே இல்லாதவர்கள் யார்.ஞானிகளுக்கு இருக்காதோ !
வெற்றி இன்பம் எல்லாம் என் திறமை; தோல்வி துன்பம் எல்லாம் அடுத்தவர் சதி, விதி,...
மனித இயல்பைச் சுட்டும் நல்ல கட்டுரை.
இராஜராஜேஸ்வரி said...
வெற்றி கிடைக்கும் போது - எப்போதும் அந்த வெற்றிக்கு நாம் தகுதி உடையவர்களாகவே நினைக்கிறோம். ஆனால் கஷ்டம் அல்லது தோல்வி என்ற ஒன்று வரும்போது மட்டும், பிறரோடு நம்மை சம்பந்தப்படுத்தி பார்க்கிறோம்.////
நன்றி இராஜராஜேஸ்வரி மேடம் வருகைக்கு.
ராமலக்ஷ்மி said...
//எனக்கும் நான் சொல்லி கொள்வேன்.//
எங்களுக்கும் சொல்லி தன்னம்பிக்கை தந்துள்ளீர்கள். பிரச்சனை இல்லாதவரே இல்லை. மீண்டு வரும் முயற்சிகளில் நகர்வதே வாழ்க்கை..////
உண்மை தான் மீண்டு வருவதில் தான் வாழ்க்கை உள்ளது. நன்றி ராமலக்ஷ்மி மேடம்.
என் ராஜபாட்டை"- ராஜா said...
அருமையான பதிவு ,,, நன்றி////
நன்றி ராஜா.
MANO நாஞ்சில் மனோ said...
சூப்பரா சொல்லிட்டீங்க மக்கா நன்றி...!////
நன்றி மனோ வருகைக்கு.
ஹுஸைனம்மா said...
//என் நண்பருக்கு மட்டுமல்ல - அவ்வப்போது எனக்கும் நான் சொல்லி கொள்வேன்//
எங்களுக்கும்!! மிக்க நன்றி.////
எல்லோருக்குமானது தான் ஹுஸைனம்மா.
A.R.ராஜகோபாலன் said...
நிதர்சனமான
நிச்சயமான
நீக்கமற எங்கும்
நிறைந்திருக்கும் உண்மை இது
அழகான பகிர்வு////
நன்றி A.R.R சார் கருத்துரைக்கு.
ஹேமா said...
தமிழ்...சுகம்தானே.காணோம்ன்னு தேடினேன் !
பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றிகொள்வதே வாழ்வின் சுவாரஸ்யம்.எனக்கு மிகவும் பிடிக்கும்.////
மிக அழகாக சொல்லிவிட்டீர்கள் ஹேமா.
அப்பாதுரை said...
வெற்றி இன்பம் எல்லாம் என் திறமை; தோல்வி துன்பம் எல்லாம் அடுத்தவர் சதி, விதி,....////
ஆமாம் சார். மனம் ஒரு குரங்கு தானே.
அருமையான, வாழ்க்கையில் தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய கதை.
வீறு கொண்டு எழுவதற்காகவே விழுகிறோம்.
நல்ல வார்த்தைகள். எங்கே காணோமே என்று பார்த்தேன். கணினிக் கோளாறா?
தரமான படைப்பு....
தன்னம்பிக்கை ஊட்டிப் போகும்
தெளிவான அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
ஆழமா யோசிச்சு, அற்புதமா எழுதறீங்க. வாழ்த்துக்கள்.
வலைச்சரத்தில் இப்பதிவை இணைத்திருக்கிறேன். நன்றி :)
கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது
http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_22.html
Post a Comment