பார்க்க விரும்பாத
மனிதர்களை தவிர்க்க,
செய்ய விரும்பாத
செயல்களை தவிர்க்க,
"மன்னிச்சுகங்க... மறந்துட்டேன்"
சொல்வதற்கு சுலபமான,
சுமுகமான பதிலாக தான் உள்ளது.
பிரச்சனைக்குரிய மனிதர்கள் -
தப்பிப்பதற்கு
இருக்கிற பல சொற்களில்
மறதியும் ஒன்று.
மறதி என்பது
அனேக பேருக்கு இருப்பதால் -
எவ்வளவு பெரிய ஞாபக மறதியும் -
வேண்டா வெறுப்பாகவாவது
மன்னிக்க தான் படுகிறது.
மறதியின் உண்மை, பொய்
அறியும் உரைக்கல் இல்லாததால் -
மறதி மனிதக் காட்டில் மழை தான்.

கடவுளோ, இயற்கையோ
மறதியை படைக்காமல்
இருந்திருந்தால் - அனேகரின் பாடு
திண்டாட்டமே...
மறதியை காதலர்கள்
மட்டும் மன்னிப்பதில்லை.
"படிச்சதெல்லாம் பரிட்சை
எழுதும்போது மறந்து போச்சும்மா"
தோல்வியுற்ற மகனை மன்னிக்க
தாய்க்கு மறதி போதுமானது.
மறதி - தப்பிப்பதற்கான
சிறந்த பதில்
என்பதை உணர்ந்து கொண்டால்
வாழ்க்கை முழுக்க தப்பிக்க
"மறந்துடுச்சு" என்பது போதுமான பதில்.
ஆனால் - பலர் நம்மிடமும்
அதையே சொல்லக்கூடும்...
எல்லோருக்குமானது தானே மறதி.



26 கருத்துரைகள்:
மறதி மட்டும் இல்லையென்றால் நூற்றாண்டு நினைவுகளோடு நாம் வாழ வேண்டியிருக்கும்...
தவறாக இருந்தாலும் மறதி நல்லதுதான்...
வித்தியாசமான சிந்தனையில் அழகிய கவிதை...
மறதியை படைத்த இறைவனுக்கு நன்றி!
மறதியை படைத்த இறைவனுக்கு நன்றி!
மறதியை படைத்த இறைவனுக்கு நன்றி!
அருமையான படைப்பு
பெரும்பாலான் நேரங்களில்
மறக்கப் படவேண்டியவைகள் மறந்து தொலையாமல்
சதா நினைவில் வந்திருந்து கெழுத்தறுப்பதுதான்
பெரிய கஸ்டம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3
உண்மை தான்.. பல வேண்டத்தகாத நிகழ்வுகளில் இருந்து இந்த மறதி எம்மை காப்பாற்றி விடுகிறது... இலகுவான வார்த்தை.
‘நொடியில் ஜென்மமெடு’ என்பது ஜென்னின் தத்துவம். அதற்கு அர்த்தம், கடந்த நொடியில் நடந்த அனைத்தையும் நீ மறந்துவிடு. அப்போது நீ புது மனிதனாக பிறப்பெடுப்பாய் என்பதுதான். அழகான ஜென்னின் தத்துவத்தை, நினைவுபடுத்துகிறது தங்களது வரிகள். அருமை.
வாவ்வ்வ்வ்வ்வ் வகை..மறதியை மறக்க வழி இருந்தால் சொல்லுங்க தமிழ்..
//மறதி என்பது
அனேக பேருக்கு இருப்பதால் -
எவ்வளவு பெரிய ஞாபக மறதியும் -
வேண்டா வெறுப்பாகவாவது
மன்னிக்க தான் படுகிறது.
மறதியின் உண்மை, பொய்
அறியும் உரைக்கல் இல்லாததால் -
மறதி மனிதக் காட்டில் மழை தான்.//
மிகச் சரியா சொன்னீங்க இதை..
மறதி இல்லையென்றால் மனிதனின் நிம்மதி கெடும்! மறதி நட்பில் கூடாதோ...!
கவிதை வீதி... // சௌந்தர் // said...
வித்தியாசமான சிந்தனையில் அழகிய கவிதை...//////
மகிழ்ச்சி சௌந்தர் கருத்துரைக்கு.
சீனுவாசன்.கு said...
மறதியை படைத்த இறைவனுக்கு நன்றி!/////
ஆமாம். இறைவனுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும் சீனிவாசன்.
Ramani said...
அருமையான படைப்பு
பெரும்பாலான் நேரங்களில்
மறக்கப் படவேண்டியவைகள் மறந்து தொலையாமல்
சதா நினைவில் வந்திருந்து கெழுத்தறுப்பதுதான்
பெரிய கஸ்டம்/////
பிறரிடம் மறதி என்றாலும் - உள்ளுக்குள் மறக்க முடியாதே.
கந்தசாமி. said...
உண்மை தான்.. பல வேண்டத்தகாத நிகழ்வுகளில் இருந்து இந்த மறதி எம்மை காப்பாற்றி விடுகிறது... இலகுவான வார்த்தை////
நன்றி கந்தசாமி.
வே.சுப்ரமணியன். said...
‘நொடியில் ஜென்மமெடு’ என்பது ஜென்னின் தத்துவம். அதற்கு அர்த்தம், கடந்த நொடியில் நடந்த அனைத்தையும் நீ மறந்துவிடு. அப்போது நீ புது மனிதனாக பிறப்பெடுப்பாய் என்பதுதான்.////
அருமையான ஜென் தத்துவம். வருகைக்கு நன்றி வே.சுப்ரமணியன்.
தமிழரசி said...
வாவ்வ்வ்வ்வ்வ் வகை..மறதியை மறக்க வழி இருந்தால் சொல்லுங்க தமிழ்..////
தமிழரசி எதற்கு மறதியை மறக்க. நன்மையிலும் தீமை. தீமையிலும் நன்மை.
ஸ்ரீராம். said...
மறதி இல்லையென்றால் மனிதனின் நிம்மதி கெடும்! மறதி நட்பில் கூடாதோ...!..////
கூடாது தான். தப்பிக்க வேறு வழி இல்லையே.
மறதி மனிதனுக்கு இறைவன் தந்த வரமென்கிறார்கள்.சில விஷயங்களில் மறதி நிச்சயம் தேவை.இல்லையேல் எத்தனையோ விபரீதங்கள் நடக்கும்.மறக்காத கவிதை தமிழ் !
மறதி ஒரு வடிகால் என்று நினைக்கிறேன்.
ஹேமா said...
மறதி மனிதனுக்கு இறைவன் தந்த வரமென்கிறார்கள்.சில விஷயங்களில் மறதி நிச்சயம் தேவை.இல்லையேல் எத்தனையோ விபரீதங்கள் நடக்கும்.மறக்காத கவிதை தமிழ்.////
தாங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஹேமா.
அப்பாதுரை said...
மறதி ஒரு வடிகால் என்று நினைக்கிறேன்..////
சில நேரங்களில் இருக்கலாம் அப்பாதுரை சார்.
///மறதி மனிதக் காட்டில் மழை தான்.///
உண்மை தானே.. கடவுள் கொடுத்த மிகப் பெரிய வரமல்லவா..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்திய சினிமாக்காரரிடம் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர் உணர்வுகள்
Arumaiyana Sintganai Sago.
Tamilmanam vote 8.
மறதியை வெல்வது எப்படி? middleclassmadhaviயின் பதிவு:)
//மறதி பல நேரங்களில் -
சாபமாக இருந்தாலும்,
அனேக நேரங்களில்
வரமாக தான் உள்ளது.//
ரொம்பவும் யதார்த்தமான, சத்தியமான வரிகள்!!
நிறைய சமயங்களில் இந்த மறதி ஒரு சாபக்கேடாக இருப்பதால்தான் சிலருடைய துரோகங்கள்கூட மன்னிக்கப்படுகின்றன. அதே சமயம், நெருங்கிய அன்பு உறவுகளில் சில காயங்களைக்கூட இந்த மறதி ஒரு வரமாக மாற்றி விடுகின்றது!
அருமையான கவிதை!
நல்ல கவிதை.
மறதி பல நேரங்களில் ஒரு சாபக்கேடுதான். மறக்க வேண்டிய விஷயங்களை மறக்க உதவுவதில்லை.
Post a Comment