கடனும், வாழ்க்கையும்...

Monday, January 9, 2012

கடன் வாங்கியே காலத்தை கழிப்பவர்கள் இருக்கிறார்கள். கடன் வாங்கி ஆடம்பர பொருட்கள் வாங்குவதை கேவலமாக நினைத்த காலமும் இருந்தது. ஆனால் இன்றைக்கு கடன் வாங்கி வீடு கட்டுவது, பொருட்கள் வாங்குவது - ஏன் நகை வாங்குவது கூட தேவையாக, பெருமையாகவும் உள்ளது. "கடன் அன்பை முறிக்கும்" என்ற பொன்மொழி மலர்ந்த மண்ணில் "கடன் வேண்டுமா" என்று கேட்டு கேட்டு தொலைபேசியில் தொந்தரவு செய்கிறார்கள்.

கடன் வாங்காவிட்டால் தான் அன்பு முறியும் போலும். பலருக்கு, வாங்கும் ஊதியத்தில் முப்பதில் இருந்து நாற்பது சதவிதம் லோன் கட்டுவதற்கே போய்விடுகிறது என்பது யதார்த்த உண்மை. முன்பு சம்பாதித்து விட்டு எதையும் வாங்கினார்கள். ஆனால் இப்போது பொருளோ, வீடோ வாங்கிய பிறகு சம்பாதிக்க துவங்குகிறார்கள்.

கடன் என்பதை தமிழில் சொல்லும் போது அசிங்கமாக தெரிகிறது. அதையே க்ரிடிட் என்றோ, லோன் என்றோ ஆங்கிலத்தில் சொல்லும்போது அழகாக தெரிகிறது. இத்தகைய சூழலில் நான் வாசித்த ஒரு மாறுப்பட்ட சிந்தனை என்னை வெகுவாக கவர்ந்தது. நாணயம் விகடனில் வாசித்தது. ஒரு குடும்ப தலைவி சொல்கிறார் இப்படி.

"பால்காரரும், பேப்பர்காரரும் மாசம் முடிஞ்சதும் தான் காசு வாங்கிப்போம்ன்னு சொல்லிட்டாங்க. அதனால் மாசம் முடிஞ்சதும் பணம் கொடுக்கிறேன். அது கூட கடன்தானேன்னு மனசு உறுத்திட்டே இருக்கு. என்னமோ தெரியல எனக்கு கடன்னாலே அப்படி ஒரு அலர்ஜி". எவ்வளவு அற்புதமாக, எத்தனை ஆழமாக சிந்தித்து சொல்லி இருக்கிறார். நாம் அன்றாடம் நமக்கே தெரியாமலே சிலரிடம் கடன் படுகிறோம் போலும். மேற்கண்ட வாசகத்தை வாசித்த போது - ஒரு பொன்மொழியும் ஞாபகத்திற்கு வந்தது.

"இரவில் கடன் வாங்கி சாப்பிட்டு - காலையில் கடன்காரனாக விழிப்பதற்கு, இரவில் பட்டினியாய் தூங்கலாம்". உண்மை தானே. அனேகம் பேர் மகிழ்ச்சியுடன் கடன் வாங்குகிறார்கள். திருப்பி தர வேண்டிய சூழல் வரும் போது ஓடி ஒளிகிறார்கள். நிறைய பேர் நன்றாக இருப்பதற்கு "கடன் இல்லாத வாழ்க்கை" காரணமாகிறது. நிறைய பேர் பாதிக்கப்படுவதற்கு "கடன் வாங்கிய வாழ்க்கை" காரணமாகிறது.

"அரசாங்கமே கடன் வாங்குகிறது" என்று சொன்னாலும், அதிகப்படியான செலவினங்களுக்கு டாஸ்மாக் தான் கை கொடுக்கிறது. கடன் வாங்கலாம் தவறில்லை என்கிற கலாசாரத்தில் நாம் வீழ்ந்து விட்டோம். இனி அந்த கலாசாரம் சரி அல்லது தவறு என்று விவாதிக்க இயலாது. அதிலிருந்து மீளவும் வாய்ப்பில்லை என்று சொல்லலாம். "எதற்கு வாங்கலாம்... எவ்வளவு வாங்கலாம்..." என்கிற வரையறை தான் இனி தேவையாக இருக்கும் போலும்.

"அதிகம் பெறாதீர்... அவதி படாதீர்..." என்பது குழந்தை பெறுவதற்கான பொன்மொழி மட்டுமல்ல, கடனை பெறுவதற்கும் கூட பொருந்தும். அதனால் குழந்தைகளை போலே - கடனையும் "அளவோடு பெற்று வளமோடு வாழலாமே". நிறைய பேர் ஏதோ ஒரு வேகத்தில் கடன் வாங்குகிறார்கள். திருப்பி தன்னால் வாங்கிய கடனை அடைக்க முடியுமா என்பதை பற்றி துளியும் சிந்திப்பதில்லை.

இதில் படித்தவர், படிக்காதவர் என்கிற பேதமில்லை. ஏற்கனவே இருக்கிற கடனை அடைக்க மேலும் கடன் வாங்குவதும் நடக்கிறது. கடனை அடைக்க முடியாத சூழல் வரும்போது - பல தவறுகள் செய்ய மனம் நினைக்கிறது. சில வருஷங்களுக்கு முன்னால் கூட்டுறவு சொஸைட்டி ஒன்றில் கணக்கு வைத்திருந்தேன். ஒரு நாள் வங்கியில் போலீஸ் இருந்தது. "என்ன விஷயம்" என்று அறிந்து திடுக்கிட்டேன்.

நகை மதிப்பிட்டாளராக அங்கே பணிபுரிந்தவர் - கவரிங் நகைகளுக்கு பணம் கொடுத்து மோசடி செய்திருந்தார். அவரை ஓரளவுக்கு அறிவேன். மிக ஆடம்பரமாக தான் இருப்பார். "எல்லாம் கடன். கஷ்டத்துல இந்த மாதிரி தப்பு பண்ணிட்டார்" என்று சக ஊழியர் சொன்னார். தினசரிகளில் வரும் பல பண மோசடிகள் கூட கடன் அடிப்படையில் நடப்பவைகளே. வங்கிகளில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களே இம்மாதிரியான தவறுகளை செய்து விடுகிறார்கள்.



பலர் ஊரை விட்டு ஓடிப்போவது - கடன் சுமைகளினாலேயே. பல தற்கொலைகள் நடப்பதும் கடனாளியாக ஆனதாலேயே. "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" எனும் போது, கடன் மட்டும் இனிக்கவா செய்யும்.

34 கருத்துரைகள்:

ஸ்ரீராம். said...

ஆசைகள் அளவோடு இருந்தால் போதும். கடன் வாங்காமல் வாழலாம்!(இந்தப் பதிவில் உங்கள் வரிகளை இங்கு எடுத்துப் போட்டு மேற்கோள் காட்டினால் அதுவும் கடன் வாங்குவது போலத்தான்...இல்லை ரமேஷ்?!!)

sasikala said...

கடன் பட்டார் நெஞ்சம் போல்

பகிர்வுக்கு நன்றி அளவோடு இருக்கட்டும் நல்ல பகிர்வு

தமிழ்வாசி பிரகாஷ் said...

"அதிகம் பெறாதீர்... அவதி படாதீர்..."//

உண்மை தான்,

MANO நாஞ்சில் மனோ said...

கடன் அன்பை மட்டுமல்ல, உயிரையும் பறிக்கும், கடன் வாங்கி அல்லல் படாதே, அளவுக்கதிகமாக ஆசைப்பட்டால் கடன்பட நேரிடும் ஜாக்கிரதை...!!!

ராமலக்ஷ்மி said...

இந்தக் காலக்கட்டத்துக்கு அவசியமான பதிவு. சமீபத்தில் பெங்களூரில் டாக்டர்களான அம்மா, அப்பா, இரண்டு மகன்கள் குடும்பத்தோடு கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டது நினைவுக்கு வருகிறது.

Ramani said...

அருமையான இன்றைய சூழலில் அனைவரும் அவசியம்
அறிந்துகொள்ள்ள வேண்டிய பதிவு
ஆயினும் அளவுக்கு மீறினால அமர்தமும் நஞ்சு என்பதைவிட
மிகச் சிறியது ஆயினும் விஷம் கொடியது எனச் சொல்லி இருக்கலாமோ
எனத் தோன்றியது.மனம் கவர்ந்த பதிவு.
பகிர்வுக்கு நன்றி
த.ம 4

ஹேமா said...

தமிழ்....எப்பவும் வாழ்வியலோடு தொடர்புள்ள பதிவுகள்.பாராட்டலாம் எப்போதுமே உங்களை.

கடனா...வேணாம்.
இருந்தால் செய்யலாம் உதவிகள்கூட நிறைய.வெள்ளைவேட்டித்தனமாய் கடன்பட்டுச் செய்துவிட்டு குடல் அறுந்துபோக நஞ்சு குடிக்க எனக்கு விருப்பமில்லை !

மீனாக்ஷி said...

ஆஹா ஸ்ரீராம்! :)

கடன் இல்லாத வாழ்கை நிம்மதிதான். ஆனால் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற ஆசையில் ஒரு தொழில் தொடங்கி, அது நஷ்டம் ஆனால் கடனாளி ஆக நேரிடுகிறது. இதற்காக முயற்சிகள் செய்யாமல் இருக்க முடியுமா? எதையுமே நம்மால் சமாளிக்க முடியும் என்று உறுதியுடன் நம்பினால் கடனும் வாங்கலாம். தவறில்லை. இருந்தாலும் இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வது நல்லது. என்னை பொறுத்தவரை கடன் இருந்தால் கூட கலங்காமல் வாழ முடியும். சந்தோஷம் இல்லாத வாழ்க்கைதான் கலங்கடித்து விடும்.

A.R.ராஜகோபாலன் said...

"""இரவில் கடன் வாங்கி சாப்பிட்டு - காலையில் கடன்காரனாக விழிப்பதற்கு, இரவில் பட்டினியாய் தூங்கலாம்". உண்மை தானே"

பொன் எழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய வார்த்தைகள்,
அருமையான பகிர்வுக்கு நன்றி நண்பரே

பாலா said...

கடன் என்பது நம் அவசர தேவைக்கும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும் என்று இருந்தால் பரவாயில்லை. ஆடம்பர தேவைகளுக்கு கடன் வாங்க தொடங்கினால்தான் தொல்லை ஆரம்பமாகும்.

தமிழ் உதயம் said...

ஸ்ரீராம். said...

ஆசைகள் அளவோடு இருந்தால் போதும். கடன் வாங்காமல் வாழலாம்!(இந்தப் பதிவில் உங்கள் வரிகளை இங்கு எடுத்துப் போட்டு மேற்கோள் காட்டினால் அதுவும் கடன் வாங்குவது போலத்தான்...இல்லை ரமேஷ்?!!).////


நயம்பட சொல்லிவிட்டீர்கள் ஸ்ரீராம்.

தமிழ் உதயம் said...

sasikala said...

கடன் பட்டார் நெஞ்சம் போல்

பகிர்வுக்கு நன்றி அளவோடு இருக்கட்டும்.////


எதிலும் அளவு, எங்கும் அளவு - உயரும் வாழ்வு. நன்றி சசிகலா.

தமிழ் உதயம் said...

தமிழ்வாசி பிரகாஷ் said...

"அதிகம் பெறாதீர்... அவதி படாதீர்..."//

உண்மை தான்,.////

உண்மை தான் பிரகாஷ். நன்றி.

தமிழ் உதயம் said...

MANO நாஞ்சில் மனோ said...

கடன் அன்பை மட்டுமல்ல, உயிரையும் பறிக்கும், கடன் வாங்கி அல்லல் படாதே, அளவுக்கதிகமாக ஆசைப்பட்டால் கடன்பட நேரிடும் ஜாக்கிரதை...!!!.////


ஆசை அதிகரிக்க கடனும் அதிகரிக்கும் என்பது நிஜம் தான் மனோ.

தமிழ் உதயம் said...

ராமலக்ஷ்மி said...

இந்தக் காலக்கட்டத்துக்கு அவசியமான பதிவு. சமீபத்தில் பெங்களூரில் டாக்டர்களான அம்மா, அப்பா, இரண்டு மகன்கள் குடும்பத்தோடு கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டது நினைவுக்கு வருகிறது.///


வருத்தப்பட வைத்த விஷயம் ராமலகஷ்மி மேடம்.

தமிழ் உதயம் said...

Ramani said...


அறிந்துகொள்ள்ள வேண்டிய பதிவு
ஆயினும் அளவுக்கு மீறினால அமர்தமும் நஞ்சு என்பதைவிட
மிகச் சிறியது ஆயினும் விஷம் கொடியது எனச் சொல்லி இருக்கலாமோ
எனத் தோன்றியது.//////

உண்மை. அருமை ரமணி சார்.

தமிழ் உதயம் said...

ஹேமா said...

கடனா...வேணாம்.
இருந்தால் செய்யலாம் உதவிகள்கூட நிறைய.வெள்ளைவேட்டித்தனமாய் கடன்பட்டுச் செய்துவிட்டு குடல் அறுந்துபோக நஞ்சு குடிக்க எனக்கு விருப்பமில்லை !//////

மொத்த பதிவும் இரண்டு வரி பின்னூட்டத்தில் அழகாக ஹேமா.

தமிழ் உதயம் said...

மீனாக்ஷி said...

ஆஹா ஸ்ரீராம்! :)

என்னை பொறுத்தவரை கடன் இருந்தால் கூட கலங்காமல் வாழ முடியும். சந்தோஷம் இல்லாத வாழ்க்கைதான் கலங்கடித்து விடும்.!//////

மாறுபட்ட சிந்தனை மீனாட்சி உங்களுடையாது.

தமிழ் உதயம் said...

A.R.ராஜகோபாலன் said...

"""இரவில் கடன் வாங்கி சாப்பிட்டு - காலையில் கடன்காரனாக விழிப்பதற்கு, இரவில் பட்டினியாய் தூங்கலாம்". உண்மை தானே"

பொன் எழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய வார்த்தைகள்,//////

நன்றி A.R.R சார்.

தமிழ் உதயம் said...

பாலா said...

கடன் என்பது நம் அவசர தேவைக்கும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும் என்று இருந்தால் பரவாயில்லை. ஆடம்பர தேவைகளுக்கு கடன் வாங்க தொடங்கினால்தான் தொல்லை ஆரம்பமாகும்.//////

உண்மை பாலா.

அப்பாதுரை said...

உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.
வரம்பும் அளவும் தெரியாவிட்டால் மூழ்கித்தான் ஆகவேண்டும்.

ஹுஸைனம்மா said...

தேவையில்லாமல் கடன் வாங்குவதும் கூடாது; கொடுப்பதும் கூடாது. உலகளாவிய ரிஸஷனின் தொடக்கப் புள்ளியே கடன்கள்தானே!!

pudukai selva said...

கடன் வாங்கி கல்யாணம்னு பழைய தமிழ்ப்படம் ஐம்பதுகளில் வந்தது .அதிலே பாலையா ஜமீன்தார்.ஊரெல்லாம் கடன் வாங்கியிருப்பார்.தன கூட ரெண்டு அடியாள் வைத்திருப்பார்.ஜமீன்தாரை பார்க்க வருகிறர்களிடம் அடியாள் கேட்பார்.பணம் கொடுக்க வந்திருக்கிறீர்களா.பணம் வாங்க வந்திருக்கிறீர்களா என்று.பணம் கொடுப்பதை இருந்தால் உள்ளே வாங்க.பணம் கேட்கிறதா இருந்தா இப்படியே திரும்பி போயிருங்க ......
ஜமீன்தார் மகன் ராமச்சந்திரன் கேட்பார் "ஏம்பா ஊரெல்லாம் கடன் வாங்கியிருக்கிறீங்க ...எனக்கு கேவலமாயிருக்கு. "
ஜமீந்தார் திரும்ப கம்பீரமா திரும்ப சொல்லுவார் " கடன் வாங்க வாங்க தான் கௌரமே கூடுது "

அப்பாதுரை said...

hilarious, pudukai selva !

dhanasekaran .S said...

அருமை வாழ்த்துகள்

தமிழ் உதயம் said...

அப்பாதுரை said...

.
வரம்பும் அளவும் தெரியாவிட்டால் மூழ்கித்தான் ஆகவேண்டும்..//////

உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை அப்பாதுரை சார்.

தமிழ் உதயம் said...

ஹுஸைனம்மா said...

தேவையில்லாமல் கடன் வாங்குவதும் கூடாது; கொடுப்பதும் கூடாது. உலகளாவிய ரிஸஷனின் தொடக்கப் புள்ளியே கடன்கள்தானே//////

தனி நபருக்கு மட்டுமல்ல உலகிற்கே கடன் தான் பிரச்சனை ஹுஸைனம்மா

தமிழ் உதயம் said...

pudukai selva said....
ஜமீன்தார் மகன் ராமச்சந்திரன் கேட்பார் "ஏம்பா ஊரெல்லாம் கடன் வாங்கியிருக்கிறீங்க ...எனக்கு கேவலமாயிருக்கு. "
ஜமீந்தார் திரும்ப கம்பீரமா திரும்ப சொல்லுவார் " கடன் வாங்க வாங்க தான் கௌரமே கூடுது "//////

அப்படியும் நிறைய பேர் ஏமாந்து போகிறார்கள் செல்வா.

தமிழ் உதயம் said...

dhanasekaran .S said...

அருமை வாழ்த்துகள்"//////

நன்றி தனசேகரன்

pudukai selva said...

"ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டு போன திசை
எல்லாருக்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு" -
அவ்வையார் பாடல் எல்லா காலத்திற்கும் எல்லாருக்கும் பொருந்தும் பொன்மொழி.......(அரசாங்கத்திர்க்கல்ல)

மனோ சாமிநாதன் said...

' கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று கம்பரே பாடியிருக்கிறாரே! தற்போதைய கிரெடிட் கார்டுகள் தான் நம்மை முழுவதுமாக கடனாளியாக்குகிற‌து!

சி.கருணாகரசு said...

வணக்கம் தமிழ்...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

வே.சுப்ரமணியன். said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் தங்களது அன்பு உறவுகளுக்கும், இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்! அய்யா!

இராஜராஜேஸ்வரி said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...